தமிழ்நாடு

”ஏழை, எளிய மக்களை பற்றி எப்போதும் பா.ஜ.கவுக்கு கவலை இல்லை” : கனிமொழி எம்.பி பேச்சு!

தி.மு.க சார்பில் ’உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற நாடளுமன்றத் தொகுதி பரப்புரைக் கூட்டம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற வருகிறது.

”ஏழை, எளிய மக்களை பற்றி எப்போதும் பா.ஜ.கவுக்கு கவலை இல்லை” : கனிமொழி எம்.பி பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

2021ஆம் ஆண்டுநடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக, அ.தி.மு.க அரசின் 10 ஆண்டு கால முறையற்ற நிர்வாகம், மக்களின் குறைகள், மக்கள் பட்ட துன்பங்களை நேரடியாக கேட்டறிந்திட தமிழ்நாடு முழுவதும் கழகத்தினர் (விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்) என்ற தேர்தல் பரப்புரையை நடத்தி, அராஜக அ.தி.மு.கவை மக்கள் நிராகரிக்கப் பதற்கான அடித்தளமிட்டனர்.

வரஇருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் கடந்த 10 ஆண்டு காலத்தில் ஒன்றிய பா.ஜ.க. அரசு, தமிழ்நாட்டுக்கு இழைத்த அநீதிகளையும், ஒன்றிய அரசிடம் மாநிலத்தின் உரிமைகளை அடகு வைத்து, தற்போது நாடகமாடும் அடிமை அதிமுகவின் துரோகங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், முதற்கட்டமாக “உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்” என்ற தலைப்பில் நாடாளுமன்ற தொகுதி வாரியாக தேர்தல் பரப்புரை கூட்டங்களை நடந்து வருகிறது.

நேற்று, சிவகங்கையில் நடந்த பொதுக்கூட்டத்தில் - அமைச்சர் இ பெரியசாமி, திருநெல்வேலியில் கனிமொழி எம்.பி, விழுப்புரத்தில் ஆர்.எஸ்.பாரதி, தூத்துக்குடியில் பொன் முத்துராமலிங்கம், கடலூரில் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், திருபெரும்புத்தூரில் மா.சுப்பிரமணியன், ஈரோட்டில் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாமக்கலில் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி, கன்னியாகுமரியில் திண்டுக்கல் ஐ.லியோனி, மயிலாடுதுறையில் பேராசிரியர் சபாபதிமோகன், திருவண்ணாமலையில் முனைவர் கோவி செழியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

”ஏழை, எளிய மக்களை பற்றி எப்போதும் பா.ஜ.கவுக்கு கவலை இல்லை” : கனிமொழி எம்.பி பேச்சு!

திருநெல்வேலியில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட கனிமொழி எம்.பி, "தென்மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை நிதியமைச்சர் நேரில் பார்த்தார். மக்கள் அரிசி இல்லாமல், உப்பு,பருப்பு இல்லாமல் தவித்ததையும் பார்த்தார். ஆனால் அதை பற்றி எந்த கவலையும் இல்லாமல் கோவில் புரோகிதரின் சம்பளம் குறைவாக இருக்கிறது என்று பேசிவிட்டு சென்றார். அவருக்கு மட்டுமல்ல பா.ஜ.க ஆட்சியில் இருக்கும் அனைவருக்குமே ஏழை, எளிய, சாமானிய மக்களை பற்றி எப்போதும் எந்த கவலையும் இருக்காது" என தெரிவித்துள்ளார்.

அதேபோல் ஈரோட்டில் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ”1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையிலான 16 இலட்சம் மாணவர்கள் இன்றைக்கு காலை சிற்றுண்டி திட்டத்தின் மூலம் பயன் பெறுகிறார்கள்.ஒரு தந்தையாக தாயாக பெண் பிள்ளைகளுக்கு மாதம் ரூ.1000 ரூபாய் வழங்குகிறேன் என்று “புதுமைப் பெண்” திட்டத்தை தொடங்கி சொன்னவர் நம் முதலமைச்சர் “நம்மை காக்கும் 48” திட்டத்தின் கீழ் மனிதாபிமானத்தை விதைத்தவர்.இப்படி திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை எங்களால் பட்டியலிட முடியும்! அ.தி.மு.க கட்சியினரால் அவர்களின் சாதனைகளை பட்டியிலிட முடியுமா?” என கேள்வி எழுப்பினார்.

இன்றும் ’உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற நாடளுமன்றத் தொகுதி பரப்புரைக் கூட்டம் நடைபெறுகிறது.

banner

Related Stories

Related Stories