தேனி மாவட்டம் கம்பம் சாமாண்டிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விஜய். இளைஞரான இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு 15 வயது சிறுவன் ஒருவரை சைக்கிளில் அழைத்து சென்றுள்ளார். அப்போது அவர் சிறுவனை வலுக்கட்டாயமாக ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் ரீதியான தொந்தரவு செய்துள்ளார்.
அப்போது அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்த சிறுவனை விஜய் தாக்கியுள்ளார். பின்னர் இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுவன் தனது பெற்றோரிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். இதைகேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் கம்பம் தெற்கு நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் பேரில் போலிஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விஜயை கைது செய்தனர். இதையடுத்து இவ்வழக்கு தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், குற்றவாளி விஜய்க்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 21 ஆயிரம் அபராதமும் அதை செலுத்தத் தவறினால் 1 வருட கடுங்காவல் தண்டனை என நீதிபதி கணேசன் தீர்ப்பளித்தார்.