தமிழ்நாடு

”காந்தி குறித்த ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்து முற்றிலும் பொய்” : வால்டர் தேவாரம் ஆதாரத்துடன் விளக்கம்!

மகாத்மா காந்தி குறித்து ஆளுநரின் ஆர்.என்.ரவியின் கருத்துக்கு ஓய்வுபெற்ற டி.ஜி.பி. வால்டர் தேவாரம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

”காந்தி குறித்த ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்து முற்றிலும் பொய்” : வால்டர் தேவாரம் ஆதாரத்துடன் விளக்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் ஆளுநராக இருக்கும் ஆர்.என்.ரவி தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்து வேண்டும் என்றே குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார். தற்போது "நாம் சுதந்திரம் பெறுவதற்குக் காந்தியின் போராட்டம் பலன் அளிக்கவில்லை. நாம் சுதந்திரம் பெற்றதற்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் முக்கிய காரணம்" என்று கூறியுள்ளார் ஆர்.என்.ரவி.

இதையடுத்து ஆளுநரின் இந்த கருத்திற்குப் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், ஆளுநரின் கருத்தை நான் முழுமையாக எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ளார் ஓய்வுபெற்ற டி.ஜி.பி. வால்டர் தேவாரம்.

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த வால்டர் தேவாரம், " ஆளுநர் கூறிய கருத்தை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. நேரு, காந்தி, லால்பகதூர் சாஸ்திரி, நேதாஜி உள்ளிட்டவர்கள் விடுதலை போராட்டத்தின் போது என்ன செய்தார்கள் என்று மக்கள் அனைவருக்கும் தெரியும். இவர்கள் அனைவரும் சுதந்திரப் போராட்ட வீரர்கள் தான் அகிம்சையால் சுதந்திரம் கிடைக்காது என்பதால் ஆயுதம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டார் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.

இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா, வியட்நாம், தாய்லாந்து, கம்போடியா, பர்மாவை வீழ்த்தி ஜப்பான் ராணுவம் வெற்றி பெற்றதை அடுத்து இந்தியாவைத் தாக்கும் என நினைத்தார்கள். ஜப்பான் விமானப்படையும் இந்தியா மீது குண்டு வீசியது.

”காந்தி குறித்த ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்து முற்றிலும் பொய்” : வால்டர் தேவாரம் ஆதாரத்துடன் விளக்கம்!

அப்போது, மணிப்பூர் இம்பாலில் பெரிய சண்டை நடந்தது. பிரிட்டிஷ்-இந்திய ராணுவத்தில் இந்தியர்கள் அதிகம் இருந்தார்கள். அந்த சண்டையில் ஜப்பான் ராணுவம் இந்திய ராணுவ வீரர்களை பிடித்து கைதிகளாக வைத்திருந்தார்கள்.

அப்போது சுபாஷ் சந்திரபோஸ் அங்கு சென்று ஜப்பான் ராணுவத்திடம் அவர்களை கைதிகளாக வைக்காதீர்கள். அவர்கள் உங்களுக்கு ஆதரவாக, பிரிட்டிஷ் ராணுவத்தை எதிர்த்து போரிடுவார்கள் என்று கூறினார்.

அதன்படி, தேசிய ராணுவ வீரர்கள் என்ற பெயரில் அதில் நிறையப் பேர் சேர்ந்து போராடினார்கள். 1942-க்கு பிறகு நாகாலாந்து தலைநகர் கோஹிமாவிலும் சண்டை நடைபெற்றது. அதில் ஜப்பான் ராணுவத்திலிருந்த தேசிய ராணுவ வீரர்களை, பிரிட்டிஷ்- இந்திய ராணுவம் தோற்கடித்தது. அதன் பின்னர் ஜப்பான் ராணுவம் முன்னேறவில்லை. இதுதான் இறுதி சண்டை. இன்றும் அதற்கு ஆதாரமாகத் தூண் அங்கு இருக்கிறது.

1944-ல் இந்த போர் நிறைவு பெற்றது. 1945-ல் ஹிரோஷிமா நாகசாகி குண்டு வீசப்பட்டது. இந்த சண்டையால் பிரிட்டிஷ் ராணுவம் நமக்கு சுதந்திரம் கொடுக்கவில்லை. 1945-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்திலேயே பிரிட்டிஷ், இந்தியாவுக்கு விடுதலை வழங்க முடிவு செய்தது. அதனால் இந்திய சுதந்திரம் மகாத்மா காந்தி, அவரை சேர்ந்த லட்சக்கணக்கானோர் போராடி உயிரை கொடுத்தார்கள். அதிலும் சுபாஷ் சந்திரபோசும் அடங்குவார்கள். அப்படிதான் சுதந்திரம் கிடைத்தது.

ஆளுநர் ஆர்.என். ரவி சொல்வது போல 1942-க்கு பிறகு காந்தி போராடாமல் வீட்டுக்குச் சென்றுவிட்டாரா? அல்லது ஓய்வு பெற்றுவிட்டாரா? அவர் சுதந்திரம் கிடைக்கும் வரை அகிம்சை வழியில் போராடிக் கொண்டுதான் இருந்தார். 1942-ம் ஆண்டு என்று சொல்வது என்ன கணக்கு?. எனவே ஆளுநர் கூறியது முற்றிலும் தவறு பொய் என விளக்கமாகப் பதிலடி கொடுத்துள்ளார்.

banner

Related Stories

Related Stories