தமிழ்நாடு

“சிறு தவறும் இல்லாமல் இளைஞரணி மாநாட்டை நடத்திக்காட்ட வேண்டும்...” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு !

சிறு தவறும் இல்லாமல் கடமை கண்ணியம் கட்டுப்பாட்டோடு கழக இளைஞரணி மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக்காட்ட வேண்டும் என்று இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“சிறு தவறும் இல்லாமல் இளைஞரணி மாநாட்டை நடத்திக்காட்ட வேண்டும்...” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

திமுக இளைஞர் அணியின் 2-வது மாநாடு வரும் ஜனவரி 21-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு இளைஞர் அணி மாநாட்டு பாடல் வெளியீடு நிகழ்ச்சி இன்று சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. மாநில இளைஞர் அணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கழக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் கலந்து கொண்டு மாநாட்டு பாடலை வெளியிட்டார்.

தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, “வெறும் சினிமா பாடல்கள் மட்டுமல்லாமல் இதுபோன்று கழகத்திற்கு, கழகத்தின் கொள்கையை பேசும் நிறைய பாடல்கள் வரவேண்டும். கழகத்தை கட்டுக்கோப்பாக நடத்துபவர் பொதுச்செயலாளர் துரைமுருகன். அதிமுகவில் யார் பொது செயலாளர்கள் என்ற குழப்பம் தினம்தோறும் ஏற்படும். ஆனால் திமுகவில் என்றும் மாறாத பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் அவர்கள். அவருக்கு பின்னர் துரைமுருகன். இதுவே திமுக-வின் கடமை கண்ணியம் கட்டுப்பாடு.

“சிறு தவறும் இல்லாமல் இளைஞரணி மாநாட்டை நடத்திக்காட்ட வேண்டும்...” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு !

இந்த மாநாடு வெகு சிறப்பாக நடைபெறும் வகையாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த நாட்களில் மக்கள் நன்மைக்காகவே மாநாடு தள்ளிவைக்கப்பட்டது. மாநாட்டிற்கு முதல் நாள் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது அந்த வகையில் ஆயிரம் வாகனங்கள் மூலம் பேரணியாக சென்று தலைவருக்கு வணக்கம் செலுத்தப்பட உள்ளது.

மேலும் இளைஞர் அணியின் வரலாற்று புகைப்பட கண்காட்சியை தலைவர் திறக்க உள்ளார். மாநாட்டில் 11 பதிப்பகங்கள் மூலம் புத்தகம் விநியோகம் செய்யப்படவுள்ளது. மாநாட்டன்று காலை 9 மணி அளவில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி அவர்கள் கொடியேற்றி வைக்க உள்ளார்.

தொடர்ந்து கழகத்தின் 22 பேச்சாளர்கள் 22 தலைப்புகளில் சிறப்புரை ஆற்ற உள்ளனர். சிறு தவறும் இல்லாமல் கடமை கண்ணியம் கட்டுப்பாட்டோடு மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக்காட்ட வேண்டும்.” என்றார்.

இதைத்தொடர்ந்து தனது சமூக வலைதள பக்கத்தில், “நம் பெருமைமிகு திமுக இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாட்டுக்கு இன்னும் நான்கு தினங்களே உள்ள நிலையில், மாநில உரிமை மீட்பு முழக்கமாக நடைபெறவுள்ள இளைஞர் அணி மாநாட்டுக்கானப் பாடலை கழகப் பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன் அவர்கள், நம் அண்ணா அறிவாலயத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் திருவுருவச்சிலைகள் அருகே இன்று வெளியிட்டார்கள்.

நிதி உரிமை, கல்வி உரிமை, மொழி உரிமை, வேலைவாய்ப்பு உரிமை என ஒட்டுமொத்தமாக நம் மாநில உரிமைகளை நிலைநாட்டிடும் வகையில் நடைபெற உள்ள கழக இளைஞர் அணி மாநாட்டின் லட்சியத்தை உணர்த்தும் வகையில் மாநாட்டுப் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சிறப்புக்குரிய பாடலை வெளியிட்ட கழக பொதுச் செயலாளர் துரைமுருகன் அவர்களுக்கு எங்கள் அன்பும், நன்றியும். ஜனவரி 21 அன்று சேலத்தில் கூடுவோம் - நம் இளைஞரணி மாநாட்டை வெல்லச் செய்வோம். ஜனவரி 21 அன்று சேலத்தில் கூடுவோம் - நம் இளைஞரணி மாநாட்டை வெல்லச் செய்வோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories