தமிழ்நாடு

பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி ரூ. 5000 கோடி மோசடி : பா.ஜ.க பிரமுகர் உட்பட 11 பேர் கைது!

மதுரையில் பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் ரூ.5000 கோடி மோசடி செய்த பா.ஜ.க பிரமுகர் உட்பட 11 பேரை போலிஸார் கைது செய்தனர்.

பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி ரூ. 5000 கோடி மோசடி : பா.ஜ.க பிரமுகர் உட்பட 11 பேர் கைது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு நியோமேக்ஸ் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனத்தில் முதலீடு செய்தால் பணத்தினை இரட்டிப்பாகத் தருவதாகவும், மாதம் 12 முதல் 30 % வரை வட்டி தருவதாகவும் கவர்ச்சி கரமாண அறிவிப்புகள் வெளியானது.

இதை நம்பி பொதுமக்கள் பலரும் தங்களது பணத்தை நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். ஆனால் இவர்கள் சொன்னபடி பணத்தை யாருக்கும் திருப்பி கொடுக்கவில்லை. மேலும் ரூ. 5000 கோடி வரை மோசடி நடந்துள்ளது. இதையடுத்து பணத்தை இழந்தவர்கள் இது குறித்து மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் நியோமேக்ஸ் நிறுவனத்தின் இயக்குநரான பா.ஜ.க பிரமுகர் வீரசக்தி, கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட சிலர் மீது பொருளாதார குற்றப்பிரிவினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்நிறுவனத்திற்குச் சொந்தமான கிளை நிறுவனங்களான 17 இடங்களில் ஆய்வு செய்யப்பட்டு கார்கள், தங்கம், ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் குற்றவாளிகளைக் கைது செய்ய மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் மற்றும் விசாரணை மேற்கொண்டனர்.

பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி ரூ. 5000 கோடி மோசடி : பா.ஜ.க பிரமுகர் உட்பட 11 பேர் கைது!

இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் இந்நிறுவனத்தின் மோசடி வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மோசடியில் 92 பேருக்குத் தொடர்பு இருப்பதும் தெரிந்தது. இவ்வழக்கு தொடர்பாக இதுவரை ரூ.17.25 கோடி மதிப்பிலான 752 வங்கி பரிவர்த்தனைகளும் முடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நியோமேக்ஸ் நிறுவன தலைமை நிர்வாக இயக்குநர்களில் ஒருவரான மதுரை விராட்டிபத்து பகுதியைச் சேர்ந்த கமலக்கண்ணன், அவரது சகோதரரும் நியோமேக்ஸ் நிறுவன இயக்குநர்களில் ஒருவருமான சிங்காரவேலன் மற்றும் மைக்கேல் செல்வி, நடேஷ் பாபு உள்ளிட்ட இயக்குநர்களைப் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இதுதவிர, நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தின் மோசடி வழக்கின் நிறுவனர்களான பா.ஜ.க பிரமுகர் வீரசக்தி, பாலசுப்பிரமணியன் ஆகியோருக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும் இவர்கள் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து தனிப்படையினர் தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் தனிப்படையினர் திருச்சியில் வைத்து நியோமேக்ஸ் வழக்கின் தலைமை இயக்குநர்களின் ஒருவரான தலைமறைவான திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பா.ஜ.க பிரமுகர் வீரசக்தி, துணைத் தலைவர் பாலசுப்பிரமணியத்தின் மகளும் இயக்குநருமான லாவண்யா ஆகிய இருவரைக் கைது செய்தனர்.

banner

Related Stories

Related Stories