ஒரு சொல்
“இந்திய அரசமைப்புச் சட்டம் (விளக்கங்கள் விமர்சனங்கள் தீர்ப்புகள்)” என்ற என்னுடைய நூல் 2021ஆம் ஆண்டு வெளிவந்தது. அது நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்த நூல் வெளிவருவதற்குத் தூண்டுதலாக இருந்தவர் சந்தியா நடராஜன். அவர் வைத்த கோரிக்கையால்தான் அந்த நூலை எழுதினேன். அவர் மீண்டும் ஒரு கோரிக்கையை வைத்தார்.
“அரசமைப்புச் சட்டம் உருவாக அரசமைப்புச் சட்ட நிர்ணய அவை அமைந்ததல்லவா, அதில் நடந்த முக்கிய விவாதங்களை எழுதுங்களேன்” என்றார். அவர் கோரிக்கை பொருள் அமைந்தது. நியாயம் நிரம்பியது. ஆனால் அது எளிதல்ல!
அரசமைப்புச் சட்ட அவையின் விவாதங்கள் இதுவரை நூலாக தமிழில் வெளிவரவில்லை. அவ்வப்போது சிலர் சில கட்டுரைகளில் விவாதங்கள் பற்றி குறிப்பிட்டிருக்கிறார்களே தவிர யாரும் நூல் எழுத முன் வரவில்லை. எதிர்காலத்திலும் அரசு முயற்சி செய்தால் தவிர அரசமைப்புச் சட்ட நிர்ணய அவையின் விவாதங்கள் முழுமையாக வருமா என்பது கேள்விக்குரியே!
தன் பரப்பில் கொண்டிருக்கிறது. ஆங்கிலத்தில் நூலாக வெளி ஏனென்றால் அந்த விவாதங்கள் சில ஆயிரம் பக்கங்களை ஒவ்வொரு தொகுப்பும் ஆயிரம் பக்கம். அதில் மக்களவை யிட்டவர்கள் 12 தொகுப்புகளாக வெளியிட்டிருக்கிறார்கள். அவ்வளவையும் தமிழில் கொண்டு வர எனக்கு ஆயுள் விவாதங்களும். உச்ச நீதிமன்ற தீர்ப்புகளும் அடங்கும். போதாது. அது மட்டும் அல்ல. அவை அவ்வளவு அவசியமும் அல்ல. எனவே சில தலைப்புகளில் மட்டும் விவாதங்களைச் நியமனம் மற்றும் அதிகாரங்கள், ஆளுநரின் நியமனம் மற்றும் சுருக்கமாக எழுத முடிவு செய்தேன். குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள் பற்றி மட்டும் எழுத முடிவு செய்தேன். இந்த நூல் விவாதங்களின் மொழிபெயர்ப்பு அல்ல. விவாதங்களின் நோக்கையும், போக்கையும் புரிந்து கொள்ளும் வகையில் தேவையான அளவு தேர்ந்தெடுக்கப்பட்ட விவாத உரைகளை சுருக்கமாக என் தமிழில் தந்திருக்கிறேன். சில உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளையும் சுருக்கமாகத் தந்திருக்கிறேன்.
என்னுடைய விமர்சனப் பார்வைகள் சில ஆங்காங்கே தென்படும். விமர்சனம் எழுதுவது என் நோக்கம் அல்ல. படிக்கும் வாசகர்கள் அந்த விவாதங்களைப் படித்து தங்களுக்குள்ளே ஒரு மதிப்பீட்டை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதற்கு உதவவே இந்த நூல்.
1935ஆம் ஆண்டில் இங்கிலாந்து பாராளுமன்றம் நிறைவேற்றிய இந்திய அரசுச்சட்டம் (The Government of India Act 1935) தான் நம்முடைய இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையாக இருந்திருக்கிறது. இந்த வரலாற்று உண்மையை மனத்தில் கொண்டுதான் அவையில் விவாதங்கள் நடந்திருக்கின்றன. இதைப் படிப்பவர்களும் மனத்தில் நிறுத்திக் கொள்ள வேண்டும். பிரிட்டிஷ் இந்திய மாகாணங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அரசமைப்புச் சட்ட நிர்ணய அவைக்கு அப்போதிருந்த 296 பேர். இவர்களில் அதிகமானவர்கள் சென்னை மாகாணத் திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அதாவது 49 பேர். அவை உறுப்பினர்களில் காங்கிரஸ், முஸ்லீம் லீக் கட்சியினர் கம்யூனிஸ்ட் கட்சியினர் யாரும் இல்லை. அவை இயங்கிய அல்லாமல் சில சோஷலிஸ்ட்கள் இடம் பெற்றிருந்தனர். ஆனால் காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்
கம்யூனிஸ்ட் கட்சியினரும் தேர்தலில் பங்கு கொள்ளவில்லை. 1952இல்தான் அவர்கள் பங்கு பெற்றார்கள் என்றாலும் விவாதத்தில் ஈடுபட்ட சிலர் மனத்தில் கம்யூனிஸ்ட் "பயம்" இருப்பது வெளிப்படையாகத் தெரிந்தது.
பாகிஸ்தான் தனி நாடானதையும் இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளையும், மதக் கலவரங்களையும் மனத்தில் முன்னிறுத்தி வைத்துக் கொண்டே பலரும் விவாதம் செய்தார்கள் என்பது விவாதங்களைப் பார்க்கும்போது எளிதில் புலனாகும்.
அரசமைப்புச் சட்டம் அது உருவான காலத்தையே பிரதிபலித்திருக்கிறது. இதை டாக்டர் அம்பேத்கர் உணர்ந்திருந்தார். அவையில் தன்னுடைய நிறைவுரையை நிகழ்த்தும்போது இவ்வாறு குறிப்பிட்டார்.
“நான் என்ன சொல்கிறேன் என்றால், அரசமைப்புச் சட்டத்தில் பொதிந்துள்ள கோட்பாடுகள் எல்லாம் இன்றைய தலைமுறையின் கருத்துக்கள்தான், இப்படி நான் சொல்வது அதிகப்படியானது என்று நீங்கள் நினைத்தால், இக்கருத்துக்கள் அரசமைப்புச் சட்ட அவையின் கருத்துக்கள் என்றே நான் சொல்வேன். அப்படி இருக்கும்போது, வரைவுக் குழுவை குறை சொல்ல என்ன இருக்கிறது.
“அமெரிக்க அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவதில் பெரும்பங்கு வகித்த ஜபர்சன் (Jafferson) கூறிய சில கருத்துக்களை யாரும் புறம் தள்ள முடியாது. ஒவ்வொரு தலைமுறையையும் தனித்த ஒரு தேசம் என்றார் அவர். அதாவது ஒவ்வொரு தலைமுறையின் பெரும்பான்மை எண்ணப்படி அவர்கள் செய்து கொள்ளும் ஏற்பாடு அடுத்த தலைமுறையைக் கட்டுப்படுத்தாது. இதன் பொருள் என்ன என்றால் காலம் மாறும்போது அடுத்த தலைமுறை அதற்கு ஏற்ப அரசமைப்புச் சட்டத்தை மாற்றிக் கொள்ளலாம் என்பதுதான்.”
இப்போது இந்திய அரசமைப்புச் சட்டம் மூன்றாவது தலைமுறையைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. சந்திப்பு சவால்கள் நிறைந்தது. அரசமைப்புச்சட்டத்தை மீறவும், மாற்றவும் அதன் விழுமியங்களைப் புறம் தள்ளவும், பலமான முயற்சி ஒரு புறம் நடந்து கொண்டிருக்கிறது. அரசமைப்புச் சட்டத்திற்கு
ஏற்பட்டுள்ள ஆபத்தை உணர்ந்து அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பது நாட்டைப் பாதுகாப்பது என்று ஆழமாய் உணர்ந்து போராடும் முயற்சியும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் அரசமைப்புச் சட்டத்தைப் படிப்பதும், அதைப் புரிந்து கொள்ள அரசமைப்புச் சட்ட நிர்ணய அவையின் விவாதங்களை விளங்கிக் கொள்வதும் அவசியமாகிறது. அந்த அவசியத் தேவைக்கு உதவும் ஒரு எளிய, சிறிய முயற்சிதான் இந்த நூல்.
“அரசமைப்புச் சட்டத்திற்கு அப்பாற்பட்டவன் நான்” என்று அகங்காரத்துடன் சில ஆளுநர்கள் நடந்து கொண்டிருக்கும் போது, அதைக் கண்டும் காணாமல் குடியரசுத் தலைவர் கண் அயர்ந்து இருக்கும்போது, “இவர்கள் இப்படி இருக்கலாமா” என்ற கேள்வி எழும்போது, விடை தேட இந்த நூல் உதவும்.
- சிகரம் ச. செந்தில்நாதன் (நூலின் முன்னுரையில் இருந்து )