தமிழ்நாடு

பல் துலக்கும் போது வாயில் சிக்கிக் கொண்ட Tooth Brush : உரிய நேரத்தில் அகற்றிய அரசு மருத்துவமனை!

புதுக்கோட்டையில் பெண் ஒருவர் பல் துலக்கும் போது tooth brush வாயில் சிக்கியதை அடுத்து அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சிறிய சிகிச்சை மூலம் வெளியே எடுத்துள்ளனர்.

பல் துலக்கும் போது வாயில் சிக்கிக் கொண்ட Tooth Brush : உரிய நேரத்தில் அகற்றிய அரசு மருத்துவமனை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாம் எல்லோரும் காலையில் எழுந்த உடன் பல் துலக்குவோம். அப்படி பல் துலக்கிக் கொண்டிருக்கும் போது வாயில் பிரஷ் மாட்டிக் கொண்டால் என்ன ஆகும் என்று நினைத்துப் பார்த்திருப்போமா?. அப்படி ஒரு சம்பவம் புதுக்கோட்டையில் நடந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் tooth brushல் பல் துலக்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென tooth brush வாயின் தசைப் பகுதியில் குத்தி சிக்கிக் கொண்டுள்ளது. அவர் பல முறை முயற்சி செய்தும் எடுக்க முடியவில்லை.

பிறகு அவரது உறவினர்கள் முயன்றும் வாயிலிருந்து tooth brushயை வெளியே எடுக்க முடியவில்லை. உடனே அவரை கந்தர்வக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்குப் பல் மருத்துவர்கள் வாயின் தசைப் பகுதியில் மயக்க ஊசி செலுத்தி சிறிய அறுவை சிகிச்சை செய்து tooth brushயை வெளியே எடுத்தனர்.

பின்னர்தான் அந்த பெண்ணால் பேச முடிந்தது. இதையடுத்து உரிய நேரத்தில் சிகிச்சை செய்த அரசு மருத்துவர்களுக்கு அப்பெண்ணின் குடும்பத்தினர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

banner

Related Stories

Related Stories