ஆவின் ஓன்றிய பொது மேலாளர்கள் மற்றும் அனைத்து துணை பதிவாளர்கள் (பால்வளம்) ஆகியோருக்கான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் நடைபெற்றது. ஏற்கெனவே நடந்த ஆய்வு கூட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் மற்றும் நிருவாக சீரமைப்பு குறித்து பிறப்பித்த உத்தரவுகளின் நிலை குறித்தும் அதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஏற்கெனவே நடந்த ஆய்வு கூட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் மற்றும் நிருவாக சீரமைப்பு குறித்து பிறப்பித்த உத்தரவுகளின் நிலை குறித்தும் அதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பால் உற்பத்தியாளர்களின் தரத்திற்கு ஏற்ற விலை நிர்ணயம் செய்யப்படுவதையும், விவசாயிகளிடமிருந்து பால் கொள்முதல் செய்யும் பொழுது உடனடி ஒப்புகைச் சீட்டு வழங்குவதையும், உறுதி செய்தல் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
தொடக்கப் பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களின் உறுப்பினர்களுக்கு ஒப்புகைச் சீட்டு (Spot Acknowledgement) வழங்குதல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது
விவசாயிகளுக்கு புதிய கறவை மாடுகள் வாங்க கடன் வழங்குதல், கால்நடை பராமரிப்பு கடன், புதிய சங்கங்களை உருவாக்குதல், புதிய உறுப்பினர்களை சேர்த்தல் மற்றும் தொடக்க சங்கங்களின் நிதி நிலைமையினை வலுவாக்குதல் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
தீபாவளி இலக்கினை எவ்வித தோய்வும் இல்லாமல் இலக்கினை அடைய உத்தரவிட்டார். மேலும், தீபாவளியை முன்னிட்டு ஆவின் நெய், வெண்ணெய் மற்றும் அனைத்து வகையான ஆவின் பொருட்கள் பொதுமக்களிடம் தங்கு தடையின்றி கிடைக்கவும் பால் மற்றும் பால் உபபொருட்களின் விற்பனையை உயர்த்தவும் பால்வளத்துறை அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.
ஆவினில் தீபாவளிக்கு தயார் செய்யப்பட்டுள்ள சிறப்பு இனிப்பு வகைகள் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் அனைத்து ஒன்றியங்களிலும் இந்த சிறப்பு இனிப்பு வகைகள் அனைவருக்கும் கிடைக்க அனைத்து மாவட்ட பொது மேலாளர்களுக்கு அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.
ஆவின் உப பொருட்களின் விற்பனையை அதிகரிக்க மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் முக்கிய நகரங்கள் மற்றும் சுற்றுலாத் தளங்களில் புதிய ஆவின் பாலகங்கள் துவங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவும், நகரங்கள் தோறும் புதிய முகவர்கள், மொத்த விற்பனையாளர்கள் நியமனம் செய்யவும் அறிவுரை வழங்கினார்கள்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ், "பால் கொள்முதல் குறைந்துள்ளதாகவும் விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை தாமதமாக வழங்கப்படுவதாகவும் சிலர் திட்டமிட்டே தவறான தகவல்களை பரப்புகிறார்கள். பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பால் விற்பனை விலையை உயர்த்துவதற்கான வாய்ப்புகள் இல்லை" என தெரிவித்துள்ளார்.