தமிழ்நாடு

”மாநிலக் கல்விக் கொள்கை விரைவில் முதலமைச்சரிடம் வழங்கப்படும்” : அமைச்சர் பொன்முடி தகவல்!

மாநிலக் கல்விக் கொள்கை விரைவில் முதலமைச்சரிடம் வழங்கப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

”மாநிலக் கல்விக் கொள்கை விரைவில் முதலமைச்சரிடம் வழங்கப்படும்” : அமைச்சர் பொன்முடி தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

2019ம் ஆண்டு ஒன்றிய பா.ஜ.க அரசு தேசிய கல்விக் கொள்கையை உருவாக்கியது. இதற்கு மாநில அரசுகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் பத்து, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு என்பதை மாற்றி 3,5,8,10,12 ஆகிய வகுப்புகளை பொதுத் தேர்வாக மாற்றுவதன் மூலமாகப் படிக்க வருபவர்களை வடிகட்டி, வெளியில் அனுப்பப் பார்க்கிறார்கள்.

இடைநிற்றல் என்பது மிகமிக அதிகம் ஆகிவிடும். தகுதியைப் பரிசோதிப்பதாகச் சொல்லி தகுதி நீக்கம் செய்யும் தந்திரம் இது என அரசியல் கட்சிகள் பலவும் வலியுறுத்தின. மேலும் மாநிலப் பட்டியலுக்குக் கல்வி மாற்றப்பட வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குரல் கொடுத்து வருகிறார்கள்.

அதனடிப்படையில் தான் தேசிய கல்விக் கொள்கைக்குப் பதிலாக மாநில கல்விக் கொள்கை உருவாக்க உயர்மட்டக்குழு 2022ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இக்குழு ஆசிரியர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள் மாணவர்கள் மத்தியில் கருத்துக்களைக் கேட்டுப் பெற்றது. இந்நிலையில் மாநிலக் கல்விக் கொள்கை தயாரிக்கும் பணி நிறைவடைந்து விட்டதாகவும், விரைவில் முதலமைச்சரிடம் வழங்கப்படும் எனவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories