தமிழ்நாடு

"நான் நிரூபிக்கவா?".. பொய் சொன்ன பழனிசாமிக்கு பேரவையிலேயே பதிலடி கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

எதிர்கட்சித் தலைவர் இவ்வாறு சட்டமன்றத்தில் பேசுவது மரபா? என பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்தார்.

"நான் நிரூபிக்கவா?".. பொய் சொன்ன பழனிசாமிக்கு பேரவையிலேயே பதிலடி கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. காலை 10 மணிக்குத் தொடங்கிய இந்த கூட்டத்தொடரில் மறைந்த முன்னாள் உறுப்பினர்கள், தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமை செயலாளர் ப.சபாநாயகம், கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி, பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உள்ளிட்டோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வினாக்கள் - விடைகள் நேரம் தொடங்கியது. அப்போது எம்.எல்.ஏ-க்களின் கேள்விகளுக்கு அந்தந்த துறை அமைச்சர் பதில் அளித்தனர்.

பின்னர் காவிரி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். அதில், "தமிழ்நாட்டின் விவசாயத்திற்கு அடித்தளமாக விளங்கும் காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பில் வரையறுக்கப்பட்டுள்ளபடி தமிழ்நாட்டிற்குத் தண்ணீரைத் திறந்துவிடுமாறு கர்நாடக அரசிற்கு உத்தரவிட ஒன்றிய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது.” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

"நான் நிரூபிக்கவா?".. பொய் சொன்ன பழனிசாமிக்கு பேரவையிலேயே பதிலடி கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்து அரசியல் கட்சிகள் பேசினர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, காவிரி விவகாரம் குறித்து தி.மு.க உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் பேசவில்லை என தவறான கருத்து தெரிவித்தார்.

உடனே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டார். அப்போது பேசிய அவர், "நாடாளுமன்றத்தில் காவிரி விவகாரத்தில் தி.மு.க உறுப்பினர்கள் பேசவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் சொல்கிறார். நான் அவர்கள் பேசியிருப்பதை நிரூபிக்கவா? இல்லாத பொல்லாததைச் சொல்லக்கூடாது. ஒரு எதிர்க்கட்சி தலைவர் இவ்வாறு சட்டமன்றத்தில் பேசுவது மரபா?" என பதிலடி கொடுத்தார்.

banner

Related Stories

Related Stories