தமிழ்நாடு முழுவதும் ஆண்டுதோறும் ஜனவரி 14 அல்லது 15-ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக மக்கள் வெளியூர்ளில் இருந்து சொந்த ஊர்களுக்கு மக்கள் செல்ல முனைவர். இதனால் ஆண்டுதோறும் மக்களின் நலன் கருதி தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மேலும் சிறப்பு இரயில்களும் இயக்கப்படும்.
அதுமட்டுமின்றி பண்டிகையை முன்னிட்டு சுமார் 3-4 மாதங்களுக்கு முன்பே இரயிலில் முன்பதிவு தொடப்படும். அந்த வகையில் இந்த முறையும் வரும் 2024-ம் ஆண்டு பொங்கல் பண்டிகை வரும் 15-ம் தேதி தொடங்கவுள்ளது. அதன்படி ஜன. 15-ம் தேதி பொங்கல், 16-ம் தேதி மாட்டுப்பொங்கல், 17-ம் தேதி காணும் பொங்கல் என கொண்டாடப்படவுள்ளது.
இந்த தொடர் விடுமுறையை மக்கள் தங்கள் சொந்த ஊரில் கொண்டாட செல்ல முனைப்பு காட்டுவர். எனவே அதற்கு ஏதுவாக இருக்க இரயிலில் முன்பதிவு தொடங்கவுள்ளதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி 120 நாட்களுக்கு முன்பாகவே கடந்த செப்டெம்பர் 13-ம் தேதி ஜனவரி 11-ம் தேதிக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.
தொடர்ந்து ஜனவரி 12-ம் தேதி செல்ல விரும்புபவர்களுக்கு செப். 14-ம் தேதியும், ஜனவரி 13-ம் தேதி செல்ல விரும்புபவர்களுக்கு ஜனவரி 14-ம் தேதியும் முன்பதிவு டிக்கெட் தொடங்கியது. தொடங்கிய சில நிமிடங்களையே டிக்கெட் சட்டென்று தீர்ந்து விட்டது. இந்த சூழலில் ஜனவரி 14-ம் தேதி பொங்கலுக்கு முந்தைய நாளான போகி பண்டிகைக்கு ஊருக்கு செல்ல விரும்புபவர்களுக்கான முன்பதிவு டிக்கெட் இன்று (செப்.16) தொடங்கியது.
தஞ்சை, திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் இரயில்களில் இருக்கைகள் பெரும்பாலான இரயில்களில் டிக்கெட் முன்பதிவு இருந்து வருகிறது. இந்த டிக்கெட்டுகளை IRCTC இணையதளம் வாயிலாகவும், டிக்கெட் முன்பதிவு மையங்களிலும் டிக்கெட் முன்பதிவு செய்துக்கொள்ளலாம் என்பதால் பெரும்பாலானோர் இணையதங்களின் வாயிலாக முன்பதிவு செய்கின்றனர்.
பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊருக்குச் செல்ல விரும்புகிறவர்கள், இரயில்வே கால அட்டவணைப்படி, பயணத்தைத் திட்டமிட்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்தால், கடைசி நேர நெருக்கடியில் தவிப்பதைத் தவிர்க்கலாம்.