தமிழ்நாடு

“நந்தியே இருக்கக் கூடாது என்பதுதான் எங்கள் நிலைப்பாடு..” - அண்ணாமலைக்கு கே.எஸ்.அழகிரி பதிலடி !

பாஜக, ஆர்.எஸ்.எஸ். மக்கள் மத்தியில் வெறுப்பு அரசியலை தூண்டி வருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.

“நந்தியே இருக்கக் கூடாது என்பதுதான் எங்கள் நிலைப்பாடு..” - அண்ணாமலைக்கு கே.எஸ்.அழகிரி பதிலடி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சென்னையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், சட்டமன்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள், செயல் தலைவர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நேற்று நடைப்பெற்றது.

இக்கூட்டத்தில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது, ஒவ்வொரு தொகுதிகளிலும் பூத் கமிட்டி அமைப்பது குறித்தும் அரசியல் சூழ்நிலை குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. பின்பு செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, "காங்கிரஸ் கட்சி, திராவிட கழகம், கம்யூனிஸ்ட் இவர்களெல்லாம் சமநீதியை பற்றி பேசுவார்கள். சமத்துவத்தை பற்றி பேசினார்கள். நாங்கள் எப்போதும் சாதியை விரும்பவில்லை அதை ஆதரிப்பதும் இல்லை" என்றார்.

“நந்தியே இருக்கக் கூடாது என்பதுதான் எங்கள் நிலைப்பாடு..” - அண்ணாமலைக்கு கே.எஸ்.அழகிரி பதிலடி !

தொடர்ந்து பேசிய அவர், "வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஒரு கலந்தாய்வு கூட்டத்தினை நடத்தினோம். ஏற்கனவே வாக்களிச்சாவடி வட்டாரத் தலைவர், நகர தலைவர், பேரூராட்சி தலைவர்களின் முதல் கூட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது கூட்டம் திண்டுக்கல் - தேனி இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் சேர்த்து 21ஆம் தேதியும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம் பகுதிகள் சேர்த்து 24ஆம் தேதியும், திருவள்ளூரில் 30ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.

மேலும் விருதுநகர், தென்காசி பகுதிகளில் அக்டோபர் 8ஆம் தேதியும், கன்னியாகுமாரியில் அக்டோபர் 14ஆம் தேதியும், தூத்துக்குடி, திருநெல்வேலி பகுதிகளில் அக்டோபர் 22ஆம் தேதியும் நடத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. மற்ற நாடாளுமன்ற தொகுதிகளில் எந்த தேதிகளில் என்பதில் விரைவில் கூறுவோம்.

பாரதிய ஜனதா அரசாங்கம் ஆர்.எஸ் எஸ் பல்வேறு புதுப்புது பிரச்சினைகளை உருவாக்கி மக்களிடையே பிரிவினைகளை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக செயல்படுகிறார்கள். பாஜக, ஆர்.எஸ்.எஸ் கும்பல் வெறுப்பு அரசியலை தூண்டிவிடுகிறார்கள். ராகுல் அன்பை விதைக்கிறார்.

“நந்தியே இருக்கக் கூடாது என்பதுதான் எங்கள் நிலைப்பாடு..” - அண்ணாமலைக்கு கே.எஸ்.அழகிரி பதிலடி !

சமீபத்தில் அண்ணாமலை ஒரு கருத்தை கூறி இருக்கிறார. தீண்டத் தகாதவர்கள் கீழ் நிலையில் இருப்பவர்கள் கோவில் கருவறைக்குள் வர முடியவில்லை என்பதற்காக தான் குறுக்கே இருந்த நந்தியை விலக சொல்லி அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று எல்லோரும் பார்ப்பதற்கு உண்டான ஏற்பாடுகளை செய்திருக்கிறோம் என்று. அது தவறு நாங்கள் கூறுவது என்னவென்றால் நந்தியே இருக்கக் கூடாது என்பதுதான்.

ஆண்டவர் என்பவர் அனைவருக்கும் பொதுவானவர். நந்தியை விலக்கி இறைவனை காட்ட வேண்டிய அவசியம் இல்லை. நந்தியையே விலக்கி விடுவோம் என்றுதான் நாங்கள் கூறுகிறோம். அந்த காலத்தில் மதுரையில் வைத்தியநாத ஐயர் அதை செய்தார் ராமலிங்க பசும்பொன் முத்துராமலிங்கர் அதை செய்தார். பிற்படுத்தப்பட்ட மக்களை அன்றைக்கு உள்ளே அழைத்துச் சென்றார்கள். அன்றைக்கு நீங்கள் மட்டுமே நந்தியாக இருந்தீர்கள். எனவே வரலாற்றை நீங்கள் மாற்ற வேண்டாம்.

ஜாதியை உருவாக்கியவர்கள் ஆர்எஸ்எஸ் தான். பண்டைய தமிழர்கள் மத்தியில் சாதி கிடையாது. அனைவரும் வரலாற்றை பின்னோக்கி பார்ப்பார்கள் என்றால் பண்டைய தமிழர்கள் மத்தியில் இந்தியர்கள் மத்தியில் சாதி என்கின்ற அமைப்பே கிடையாது. இந்த சாதியை உருவாக்கியதே ஆர்.எஸ்.எஸ் தான். எனவே இவர்கள் சாதி பற்றி பேசுவது தவறு. காங்கிரஸ் கட்சி, திராவிட கழகம், கம்யூனிஸ்ட் இவர்களெல்லாம் சமநீதியை பற்றி பேசுவார்கள். சமத்துவத்தை பற்றி பேசினார்கள். ஜாதியை பற்றி என்றும் பேசியது கிடையாது. ஜாதி மாநாடு இதுவரை நடத்தியதில்லை. சமத்துவ சமூக நீதி வேண்டும் என கூறியிருக்கிறார்கள் நாங்கள் எப்போதும் சாதியை விரும்பவில்லை அதை ஆதரிப்பதும் இல்லை. " என்றார்.

banner

Related Stories

Related Stories