இந்தியாவின் மருத்துவ தலைநகராக சென்னை விளங்குகிறது என்றால் அது மிகையல்ல அந்த அளவிற்கு தமிழ்நாட்டினுடைய மருத்துவ கட்டமைப்பு மிகச் சிறப்பாக உள்ளது தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் இந்தியாவில் வேறு எந்த மாநில அரசு மருத்துவமனைகளிலும் இல்லாத அளவிற்கு சிறப்பு சிகிச்சைகள் அதி நவீன இயந்திரங்கள் உள்ளன.
ஒன்றிய அரசினால் தமிழ்நாடு மருத்துவத்தில் சிறந்து விளங்குவதற்காக விருதுகளும் பலமுறை பெற்றுள்ளது. இந்திய நாடு மட்டுமல்லாமல் உலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு உன் நோயாளிகளை தேடிச் சென்று மருந்துகளை வழங்கக்கூடிய மக்களை தேடி மருத்துவம் உள்ளிட்ட உன்னத திட்டங்களும் தமிழகத்தில் தான் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் சென்னை இந்தியாவிற்கு மட்டுமல்ல உலகளவில் மருத்துவத்தில் முக்கியத்துவம் பெற்ற நகராக விளங்குகிறது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு மட்டுமல்லாமல் அரசு மருத்துவமனைகளை நாடி வெளிநாட்டினரும் வருகை புரிகின்றனர்.
ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை வங்காளதேசம் -26, இலங்கை - 2,நைஜீரியா லிபரியன் உள்ளிட்ட மேற்கு ஆப்பிக்க நாடுகளிலிருந்து 14 பேர் என மொத்தம் 42பேர் இவ்வாண்டு இதுவரையில் சிகிச்சை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் முதல்வர் மருத்துவர் தேரணி ராஜன் பேசுகையில், "அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனை ஆசியாவிலேயே பெரிய பழையான மருத்துவமனை 44 துறை, 23 இயக்குனர்கள் உள்ளனர். கட்டிடத்தை பார்க்காமல் அங்கு அளிக்கக்கூடிய சிகிச்சையை தான் பார்க்கவேண்டும் நமது மருத்துவமனையில் கைதேர்ந்த மருத்துவர்கள் பணிபுரிகிறார்கள்.
வெளி நாடுகளிலிருந்து இங்கு வந்து சிகிச்சை பெறுகிறார்கள்.தனியார் மருத்துவமனைகளை ஒப்பிடுகையில் மிகப்பெரிய வேற்றுமை இருக்கும் செலவில். 42பேர் வெளி நாடுகளிலிருந்து சிகிச்சை இவ்வாண்டு பெற்றுள்ளனர். அதிகளவில் வங்கதேசத்திலிருந்து வருகிறார்கள் துபாய் என பல நாடுகளிலிருந்தும் வருகிறார்கல்.
அண்டை மாநிலங்களை சார்ந்தவர்களுக்கு என்ன கட்டணமோ அதே தான் வெளி நாட்டினருக்கும். 10லட்சம் தனியார் மருத்துவமனையில் செலவு எனில் அதில் 10ல் ஒரு பங்கு கூட செலவு ஆகாது சில இடங்களில் தனியார் மருத்துவமனையிலேயே மருத்துவமனைக்கு பரிந்துரைக்கிறார்கள்" என்றார்.
தமிழ்நாடு அரசு சார்பில் கலைஞர் காப்பீட்டு திட்டம் தமிழக மக்களுக்காக உள்ளது. அதன் மூலம் அவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம். அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் உயர் சிகிச்சை மற்றும் சிறப்பு சிகிச்சைகளுக்கு காப்பீட்டு திட்டத்தின் மூலம் பயன்பெற்று வருகின்றனர்.
அதே வேளையில், அண்டை மாநிலங்களை சார்ந்தவர்களும் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள் குறிப்பாக அருகிலிருக்ககூடிய ஆந்திரா மாநிலத்தில் இருந்து அதிக அளவில் சிகிச்சைக்காக வருகிறார்கள் அவர்களுக்கு மிகக் குறைந்த கட்டணம் மட்டுமே பெறப்படுகிறது.
உயர் சிகிச்சைகளுக்கு அதே போல் தற்பொழுது ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்தும் சிலர் இங்கு வந்து சிகிச்சை பெற்று சென்றிருக்கிறார்கள் இவை எல்லாம் தமிழ்நாட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை நன்றாக உள்ளது என ஒருவருக்கு ஒருவர் தகவல் தெரிவித்து அதன் மூலம் வருபவர்களே.
ஆம் அந்த அளவிற்கு தமிழ்நாடு மருத்துவத்துறையில் சிறந்து விளங்குகிறது அண்டை மாநிலங்களை கடந்து அயல்நாட்டினரும் வந்து சிகிச்சை பெரும் அளவிற்கு தான் தமிழ்நாடு அரசு மருத்துவமனைகள் உள்ளது என்பதற்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையே ஒரு சாட்சி. கோடி ரூபாய் கொடுத்தாலும் திரும்ப பெற இயலாது உயிர் அந்த இன்னுயிரை காக்கும் உன்னத திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது என்றால் அது மிகையல்ல.