தமிழ்நாடு

'தமிழ்நாடு'- சொல் அல்ல ; தமிழரின் உயிர்; இந்தியா முழுதும் பரவட்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

இன்று தமிழ்நாடு நாள் கொண்டாடப்படும் நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

'தமிழ்நாடு'- சொல் அல்ல ; தமிழரின் உயிர்; இந்தியா முழுதும் பரவட்டும்:  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

1967-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பேரறிஞர் அண்ணா தலைமையிலான தி.மு.க 138 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சியைப் பிடித்தது. ஆட்சியைப் பிடித்ததும், 1967 ஜூலை 18ம் தேதி 'மதராஸ் ஸ்டேட்' என்ற பெயரை ‘தமிழ்நாடு’ என்று மாற்றும் தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

பல ஆண்டு கால போராட்டம் இறுதியில் பேரறிஞர் அண்ணா மூலம், , 1967 ஜூலை 18ம் தேதி வெற்றிபெற்றது. அதைத் தொடர்ந்தே அந்த நாள் "தமிழ்நாடு நாளாக" கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

'தமிழ்நாடு'- சொல் அல்ல ; தமிழரின் உயிர்; இந்தியா முழுதும் பரவட்டும்:  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

இன்று தமிழ்நாடு நாள் கொண்டாடப்படும் நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "1956 நவம்பர் 1 அன்று மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து பிரிந்து சென்று புதிய மாநிலங்கள் தோன்றின. ஆனால், நம் தாய் நிலத்துக்குத் தமிழ்நாடு என்ற பெயர் பெற இன்னும் பதினொரு ஆண்டுகள் காக்க வேண்டியதாயிற்று!

1967-இல் இந்தியாவிலேயே முதன்முதலாக ஒரு மாநிலக் கட்சியான தி.மு.க. ஆட்சியைப் பிடித்தது. தமிழ்நிலத்தின் பெருமகன் - தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணா முதலமைச்சரானார்; 1967 ஜூலை 18-இல் 'தமிழ்நாடு' எனப் பெயர் சூட்டினோம்!

மறைமலை அடிகள், தந்தை பெரியார், சோமசுந்தர பாரதியார், சங்கரலிங்கனார், சிலம்புச் செல்வர் ம.பொ.சி என இந்தப் போராட்டத்தின் வேர் மிக ஆழமானது. இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த தமிழ்நாடுநாள்-இல், தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக்கிடப் பாடுபட உறுதியேற்போம்! தனித்துவமிக்க தமிழ்நாட்டின் ஒளி இந்தியா முழுதும் பரவட்டும்! தமிழ்நாடு வாழ்க! தமிழ்நாடு வாழ்க! தமிழ்நாடு வாழ்க" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories