தமிழ்நாடு

அள்ள அள்ள குறையா அமுதசுரபி.. அகழாய்வில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கண்டுபிடிப்பு!

நெல்லை மாவட்டம் துலுக்கர் பட்டியில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட அகழாய்வு பணியில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பாணை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அள்ள அள்ள குறையா அமுதசுரபி.. அகழாய்வில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கண்டுபிடிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழர்களின் தொன்மையான வாழ்வியல் நாகரீகம் பழமை வாய்ந்தது என்பதை உலகறியச் செய்யும் வகையில் தமிழ்நாட்டில் 8 இடங்களில் அகழாய்வு பணிகளை நடந்து வருகிறது.

இதன் ஒருபகுதியாக, நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே துலுக்கர்பட்டி கிராமம் நம்பியாற்றுப் படுகையில் முதற்கட்ட அகழாய்வு பணிகள் முடிந்து தற்போது, இரண்டாம் கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அள்ள அள்ள குறையா அமுதசுரபி.. அகழாய்வில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கண்டுபிடிப்பு!

இந்த அகழாய்வில் இதுவரை 11 குழிகள் அமைக்கப்பட்டு இதுவரை 1100 க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. செம்பினாலான மோதிரம், இரும்பினாலன பொருட்கள், சுடுமண்ணாலான விளையாட்டுப் பொருட்கள், பாசி மணிகள், நீலக்கல் மணி, பளிங்கு கல்மணிகள் ஆகியவை முக்கிய தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் குறியீடுகள் கொண்ட பானை ஓடுகள், வெண்மை நிறத்தினால் அலங்கரிக்கப்பட்ட பானை ஓடுகள் ஆகியவை கிடைத்துள்ளது. தொடர்ந்து நடந்து வந்த ஆய்வில் கடந்த வாரம் புலி என்று பொறிக்கப்பட்ட கருப்பு சிவப்பு பானை ஓடு கிடைத்தது.

இந்நிலையில் நேற்றைய ஆய்வில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைத்துள்ளது . இதன் மூலம் நம்பியாற்றுப் படுகையில் எழுத்தறிவு உள்ள மக்கள் வாழ்ந்ததற்கான ஆதாரமாகக் கிடைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அள்ள அள்ள குறையா அமுதசுரபி துலுக்கர்பட்டி என அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டியில் தமிழ் நாடு அரசின் தொல்லியல் துறை வாயிலாக நடைபெற்று வரும் அகழாய்வில் கடந்த வாரம் ‘புலி’ என்ற தமிழி எழுத்துப்பொறிப்புக் கொண்ட பானை ஓடு கிடைக்கப்பெற்றதைப் பெருமையுடன் பகிர்ந்திருந்தேன்.

அதனைத் தொடர்ந்து தற்போது கிடைத்துள்ள பானை ஓடுகளில் 'திஈய', 'திச', 'குவிர(ன்)' ஆகிய தமிழி எழுத்துப்பொறிப்புகள் கொண்ட பானை ஓடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது குறிப்பிடத்தகுந்ததாகும். நம்பியாற்றின் கரையில் எழுத்தறிவு பெற்ற தமிழ்ச் சமூகம் தனக்கே உரிய நாகரிகப் பண்பாட்டுக் கூறுகளோடு வாழ்ந்து வந்தமைக்கு இது நல்ல சான்றாகும்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories