தமிழ்நாடு

“ரூ.60 மட்டுமே.. இனி ரேஷன் கடைகளில் தக்காளி கிடைக்கும்”: தமிழ்நாடு அரசு அதிரடி - அமைச்சர் முக்கிய தகவல்!

சென்னையில் நியாய விலைக்கடைகளில் தக்காளியின் விற்பனை அளவைப் பார்த்தறிந்தபிறகு, அனைத்து மாவட்ட நியாய விலைக்கடைக்கும் தக்காளி விற்பனை விரிவுபடுத்தப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

“ரூ.60 மட்டுமே.. இனி ரேஷன்  கடைகளில் தக்காளி கிடைக்கும்”: தமிழ்நாடு அரசு அதிரடி - அமைச்சர் முக்கிய தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் தக்காளி விலையை கட்டுப்படுத்துவது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது . இக்கூட்டத்தில் கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நியாய விலைக்கடைகளின் மூலமாக தக்காளி விற்பனை செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பெரியகருப்பன் அமைச்சர் பெரியகருப்பன் , "தக்காளியை அனைத்து குடும்பத்தினரும் பயன்படுத்துகின்றனர். எனவே தக்காளி விலையை குறைக்க ஆக்கபூர்வமான பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

பண்ணைப் பசுமைக் கடைகளுக்காக கூடுதலாக தக்காளியை கொள்முதல் செய்து கிலோ 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. மொத்த விற்பனை வணிகர்களிடமும் விலை உயர்வு குறித்து பேசினோம். ஒரு வாரம் விலை நீடிக்கும் என்றார்கள்.

பருவமழை பெய்யாததால் , சில இடங்களில் கூடுதல் மழைப்பொழிவால் , விளைச்சல் குறைந்ததாலும் இந்தியா முழுமைக்கும் தக்காளி விலை உயர்ந்துள்ளது. கூட்டுறவுத்துறை பதிவாளர் , துணைப் பதிவாளர், தோட்டக்கலைத்துறை இயக்குநர்களிடம் தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் நியாய விலைக்கடையில் தக்காளி விற்பனை செய்வது குறித்து இன்று ஆலோசித்தோம்.

“ரூ.60 மட்டுமே.. இனி ரேஷன்  கடைகளில் தக்காளி கிடைக்கும்”: தமிழ்நாடு அரசு அதிரடி - அமைச்சர் முக்கிய தகவல்!

அதன்படி நாளை முதல் வட சென்னையில் 32 , மத்திய சென்னையில் 25, தென்சென்னையில் 25 என மொத்தம் சென்னையில் 82 நியாயவிலைக்கடையில் நாளை முதல் தக்காளி ஒரு கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. நாளை முதல் சென்னையில் நியாய விலைக் கடை மூலம் தக்காளி விற்பனை செய்யப்படவுள்ள நிலையில், அதன் விற்பனை அளவைப் பொறுத்து அடுத்தகட்டமாக நிச்சயமாக அனைத்து மாவட்ட நியாய விற்பனைக் கடைகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

அவ்வாறு விரிவுபடுத்தப்படும்போது அனைத்து கடைகளிலும் விற்பனை செய்யாவிட்டாலும் குறிப்பிட்ட சதவீத கடைகளில் விற்பனை செய்வோம். சென்னையில் பண்ணைப் பசுமைக் கடையுடன் சேர்த்து மொத்தம் 111 கடைகளில் நாளை முதல் தக்காளி விற்பனை செய்யப்படும்.

வரும் காலங்களில் தேவைப்பட்டால் வேளாண் விற்பனை மையம் மூலம் விவசாயிகளிடம் இருந்து தக்காளி கொள்முதல் செய்யப்படும். தமிழகத்தில் உற்பத்தியாகும் மொத்த தக்காளிகளில் சேலம் , தருமபுரி , கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 75 சதவீதமும் , திண்டுக்கல் உள்ளிட்ட பிற மாவட்டங்களில் 25 சதவீதமும் உற்பத்தி செய்யப்படுகிறது. நெல், கரும்பு போல தக்காளிக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க தமிழக அரசு சார்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருகிறோம்" என்று கூறினார்.

banner

Related Stories

Related Stories