தமிழ்நாடு

“பல வல்லுறவு வழக்கில் பாஜகவினர் குற்றவாளிகள், அது உங்களுக்கே தெரியும்” - குஷ்பூவுக்கு மாதர் சங்கம் பதிலடி

பல வல்லுறவு,வன்முறை வழக்குகளில் பாஜக உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் குற்றவாளிகள் என்பது உங்களுக்குத் தெரியும் என்று குஷ்பூவை குறிப்பிட்டு ஜனநாயக மாதர் சங்கத்தின் தேசிய நிர்வாகி வாசுகி தெரிவித்துள்ளார்.

“பல வல்லுறவு வழக்கில் பாஜகவினர் குற்றவாளிகள், அது உங்களுக்கே தெரியும்” - குஷ்பூவுக்கு மாதர் சங்கம் பதிலடி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நடிகை குஷ்பூ பாஜகவில் சேர்ந்த பின், பெண்களுக்கு எதிராக பாஜகவினர் நடத்தும் வன்முறைகள், அநீதிகள் உள்ளிட்டவற்றிற்கு எதிராக குரல் எழுப்பாமல் இருந்து வருகிறார். மேலும் தற்போது நாட்டை உலுக்கி கொண்டிருக்கும் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம், கலாஷேத்ரா விவகாரம் உள்ளிட்டவற்றிற்கும் குஷ்பூ வாயை திறக்காமல் மவுனம் காத்து வருகிறார்.

“பல வல்லுறவு வழக்கில் பாஜகவினர் குற்றவாளிகள், அது உங்களுக்கே தெரியும்” - குஷ்பூவுக்கு மாதர் சங்கம் பதிலடி

இதில் இவர், தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராகவும் இருந்து வருகிறார். அப்படி இருப்பினும் பெண்களுக்கு ஒரு பிரச்னை என்றால் கண்டும் காணாமலும் இருந்து வருகிறார். இந்த சூழலில் தன்னை பற்றி ஒருவர் அவதூறாக பேசியதாக குஷ்பூ கண்ணீர் மல்க பேட்டியளித்திருந்தார். இதைத்தொடர்ந்து குஷ்பூவுக்கு ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில செயலாளர் ராதிகா அடுக்கடுக்கான கேள்வி எழுப்பியிருந்தார். இதையடுத்து இதற்கு குஷ்பூவும் பதில் தெரிவித்துள்ளார்.

“பல வல்லுறவு வழக்கில் பாஜகவினர் குற்றவாளிகள், அது உங்களுக்கே தெரியும்” - குஷ்பூவுக்கு மாதர் சங்கம் பதிலடி

இந்த நிலையில் குஷ்பூவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜனநாயக மாதர் சங்கத்தின் தேசிய நிர்வாகியான வாசுகி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க தமிழ்நாடு மாநில குழுவின் பொதுச் செயலாளர் ராதிகாவுக்கு நீங்கள் அளித்திருந்த பதிலை நான் பார்க்க நேர்ந்தது, இது பற்றிய எனது சில கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

ஒரு வழியாக நாங்கள் விழித்துக் கொண்டோம் என குறிப்பிட்டிருக்கிறீர்கள். நாங்கள் எப்பொழுதும் விழிப்போடும், எச்சரிக்கையோடும் தான் இருக்கிறோம் சகோதரி. பாலினப் பிரச்சினைகளில் - அவர்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளில் நாங்கள் தொடர்ந்து தலையீடு செய்வதால், விழித்துக் கொள்ளவோ அல்லது எதிலும் குதிக்கவோ அவசியமில்லை. நீங்கள் விரும்பினால், நாங்கள் உங்களுக்கு விவரங்களைத் தர முடியும். எங்கள் சிந்தனை ஓய்வெடுக்கவும் இல்லை, துருப்பிடிக்கவும் இல்லை என உறுதிபட கூறுகிறோம்.

கலாக்ஷேத்ரா பிரச்சனையில், தேசிய பெண்கள் கமிஷனின் விதிகளைப் பற்றிக் குறிப்பிடுகிறீர்கள். தேசிய பெண்கள் கமிஷன் என்பது ஒரு சட்டப்பூர்வமான, தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாகும். இதன் தலையீடு அரசு நிறுவனங்களோடு நின்றுவிடும் என்றும், தனியார் மற்றும் தன்னாட்சி அமைப்புகள் அதன் வரம்புக்குள் வராது என்றும் சொல்லாதீர்கள். பிறகு ஏன் தேசிய மகளிர் ஆணைய தலைவர் கலாக்ஷேத்திராவிற்கு வந்தார்? ஒரு தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக தேசிய பெண்கள் கமிஷன் உறுப்பினர்கள் கருத்து கூட தெரிவிக்க முடியாது என்று எந்த விதிமுறை குறிப்பிடுகிறது? அல்லது கலாக்ஷேத்ரா புகார்தாரர்களை பாதிக்கப்பட்டவர்களாக தேசிய மகளிர் ஆணையம் கருதவில்லையா? உண்மையில் கலாக்ஷேத்ரா மத்திய அரசால் நிதியளிக்கப்பட்டு அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அவர்கள் NCW க்கு பதிலளிக்க வேண்டியவர்கள் இல்லையா? உங்கள் வாதத்தில் தெளிவு இல்லை. ஆனால் மாதர் சங்கம், துவக்கத்திலிருந்தும், குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு ஜாமீன் அளிப்பதை எதிர்ப்பது வரையும் போராடும் மாணவர்களுடன் இருந்தது.

ஜனநாயக மாதர் சங்கத்தின் தேசிய நிர்வாகியான வாசுகி
ஜனநாயக மாதர் சங்கத்தின் தேசிய நிர்வாகியான வாசுகி

நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கோள் காட்டி மல்யுத்த வீரர்களின் போராட்டத்தின் போது தலையிடாததை நீங்கள் நியாயப்படுத்துவது நியாயமானதாகத் தெரியவில்லை. மல்யுத்த வீரர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்துவதை அல்லது கிசான் சபா மற்றும் மாதர் சங்கம் உள்ளிட்ட பிற அமைப்புகள் மல்யுத்த வீரர்களின் கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்தி, ஆதரவு தெரிவிப்பதை நீதிமன்ற நடவடிக்கைகள் தடுக்கவில்லையே.. அப்புறம் எப்படி உங்களை மட்டும் அமைதியாக்க முடியும்?

நாங்கள் சட்டங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் கூறுகிறீர்கள். சரி, நாங்கள் அதற்குத் திறந்த மனதோடு இருக்கிறோம். ஆனால் நீங்கள் எந்த சட்டங்களை குறிப்பிடுகிறீர்கள்? தயவுசெய்து எங்களுக்கு தெளிவுபடுத்துங்கள். அதே சமயம், blind மற்றும் Deaf போன்ற வார்த்தைகளை இழிவான முறையில் பயன்படுத்துவது குற்றம் என்பது உங்களுக்குத் தெரியாதா? மாற்றுத்திறனாளிகளை நீங்கள் புண்படுத்துவது இது முதல் முறை அல்ல. பா.ஜ.க.வில் சேர்ந்த உடனேயே காங்கிரசை விமர்சிக்க இதுபோன்ற வார்த்தையை பயன்படுத்தியது நினைவிருக்கிறதா? அப்போது, மாற்றுத்திறனாளிகளுக்காக செயல்படும் TARATDAC என்ற சங்கம், எதிர்ப்பு தெரிவித்து புகார் அளித்தது. பின்னர் நீங்கள் மன்னிப்புக் கேட்டு, இதுபோன்ற சொற்களைப் பயன்படுத்தி மாற்றுத்திறனாளிகளை இனி ஒருபோதும் புண்படுத்த மாட்டீர்கள் என்று உறுதியளித்தீர்கள்.

ஆனால் இங்கே நீங்கள் மீண்டும் அதே குற்றத்தைச் செய்துள்ளீர்கள். திரும்பத் திரும்ப செய்யப்படும் ஒரு குற்றத்திற்கு சட்டம் என்ன சொல்கிறது என்பதைப் படிக்க நான் உங்களுக்கு அறிவுறுத்துகிறேன்.

“பல வல்லுறவு வழக்கில் பாஜகவினர் குற்றவாளிகள், அது உங்களுக்கே தெரியும்” - குஷ்பூவுக்கு மாதர் சங்கம் பதிலடி

இறுதியாக, உங்களை விமர்சிப்பது எங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் என்று ஏன் நினைக்கிறீர்கள்? இது உங்களைப் பற்றி நீங்களே கொஞ்சம் அதீதமாக மதிப்பீடு செய்வதாக தெரிகிறது. AIDWA என்பது ஒரு கோடிக்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட ஒரு தேசிய அமைப்பாகும், மிஸ்டுகால் அழைப்பு மூலம் சேர்க்கப்பட்ட உறுப்பினர் அல்ல, மேலும் அதன் ஸ்தாபகத் தலைவர்கள் சுதந்திர இயக்கத்திலிருந்து ஈர்க்கப்பட்டவர்கள்.

விளம்பர வெளிச்சத்தில் இருக்க வேண்டும் என்பது பற்றி நாங்கள் ஒருபோதும் கவலைப்படுவதில்லை. பிரச்சினைகளில் தலையிடும்போது உண்மையில் நாங்கள் ஆபத்துகள், காவல்துறை மற்றும் சமூக விரோதிகளின் தாக்குதல்களுக்கு ஆளாகிறோம். எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்பதற்கும், நீதிமன்றங்களில் நீதியைப் பெறுவதற்கும், அவர்களுக்கு எல்லா வழிகளிலும் உதவுவதற்கும் நாங்கள் கடுமையாகப் போராடிய நூற்றுக்கணக்கான வழக்குகளை மேற்கோள் காட்ட இயலும். ஏழை பெண்கள், தலித் பெண்கள் மற்றும் பழங்குடியினப் பெண்களுக்காக நாங்கள் இருக்கிறோம். நீங்கள் அதை அறிந்திருப்பீர்கள் என நான் உறுதியாக நம்புகிறேன். நாங்கள் அடிக்கடி தாக்கப்பட்டு, அவதூறுகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளோம். நீங்கள் விளம்பர வெளிச்சத்தைப் பற்றி பேசுகிறீர்கள். அதுவும் AIDWA பற்றி!

உங்கள் கட்சியான பிஜேபியின் சித்தாந்தம் மனு ஸ்மிருதியை அடிப்படையாகக் கொண்டது, பெண்கள், தலித்துகள், ஆதிவாசிகள் மற்றும் சூத்திரர்களைப் பற்றி மனு ஸ்மிருதி என்ன சொல்கிறது என்பதை நாங்கள் விவரிக்க வேண்டியதில்லை. இந்துத்துவா அமைப்புகளால் சிறுபான்மையினர் எவ்வாறு குறிவைக்கப்படுகிறார்கள் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். பல வல்லுறவு மற்றும் வன்முறை வழக்குகளில், பாஜக உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் குற்றவாளிகள் என்பது உங்களுக்குத் தெரியும். எனவே பாலின பிரச்சனைகளில் உங்கள் நிலைபாட்டை, அதேபோன்று உங்களது கட்சியின் நிலைபாட்டை மறுபரிசீலனை செய்யுங்கள்." என்று குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories