சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவில் புலன் விசாரணையின்போது கைப்பற்றப்படும் வழக்கு சொத்துக்களை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் உள்ள (மல்கானா) பாதுகாப்பு பெட்டக அறையில் கடந்த 31.08.2019 முதல் பாதுகாப்பாக வைக்கப்பட்டு வருகிறது.
வழக்கு சொத்துக்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் வரையிலான இடைப்பட்ட காலத்திலும், நீதிமன்றத்தில் ஒப்படைத்தபின் மீண்டும் புலன் விசாரணையின் அதிகாரியின் பாதுகாப்பில் ஒப்படைக்கப்படும் நிகழ்வுகளிலும் வழக்கு சொத்துக்கள் பாதுகாப்பாகவும், அதன் சாட்சிய மதிப்பு மாறாமலிருக்கும் வகையில் அச்சொத்துக்கள் நீதிமன்ற தீர்ப்பின் மூலம் முடித்து வைக்கும் வரையில் (மல்கானா) பாதுகாப்பு பெட்டக அறையில் வைத்து பாதுகாக்கப்படுகிறது.
2) இந்த பாதுகாப்பு பெட்டக அறையில், 403 வழக்குகளில் சம்பந்தபட்ட 44 வகையான, விலையுயர்ந்த பொருட்கள், ஆவணங்கள் உட்பட 2,925 வழக்கு சொத்துக்கள் வைக்கப்பட்டுள்ளது.
3) பாதுகாப்பு பெட்டக அறையில் (மல்கானா)
i) அதிக அளவிலான சாட்சிய பொருட்கள் கைப்பற்றப்பட்டு பாதுகாக்கப்படுவதாலும்,
ii) புலன் விசாரணை அதிகாரிகள் மாறி புதிய புலன் விசாரணை அதிகாரிகள் பொறுப்பேற்றல் மற்றும் நீண்ட காலமாக பாதுகாக்கப்பட்ட வருவதால் அவற்றை அந்த சொத்துக்களை வழக்கு எண் வரிசையில் அடையாளம் காணுதல்
iii) சொத்துக்கள் புலன் விசாரணை அதிகாரியின் பொறுப்பில் உள்ளதா அல்லது நீதிமன்றத்திற்கு எடுத்து செல்லப்படுகிறதா அப்படியெனில் யாரால் எப்போது போன்ற விவரங்கள்
iv) வழக்கு சொத்துக்கள் அடிக்கடி நீதிமன்றத்திற்கும் எடுத்து சென்று திரும்ப கொண்டு வந்து ஒப்படைக்கப்படுவது போன்ற பல காரணங்களாலும் இதை முறையாக பராமரித்தல் பெரும் சவாலாகவே உள்ளது.
4) சவாலை சரி செய்யவும், வழக்கு சொத்துக்களை பதிவேடுகளை கொண்டு பராமரிப்பதை தவிர்க்கவும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களின் உத்தரவின் பேரில் QR code (Quick Response) வடிவத்துடன் பாதுகாப்பு பெட்டக அறையின் ஆவணங்களை பராமரிக்க மென்பொருள் ஒன்று உருவாக்கப்பட்டு சென்னை பெருநகர காவல் மத்திய குற்றப்பிரிவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதனால் i) ஒவ்வொரு வழக்கு சொத்தினையும் அடையாளம் காணும் வகையில் தனிப்பட்ட QR code வழங்கப்பட்டு அதனை உரிய பாதுகாப்புடன் எளிதில் கையாள முடியும்
ii) வழக்கு சொத்து புலன் விசாரணை அதிகாரி, பாதுகாப்பு பெட்டகம் மற்றும் நீதிமன்றம் ஆகியோரில் யாருடைய பொறுப்பில் உள்ளது என்று சங்கிலி தொடர் போன்று கண்காணிக்க இயலும்,
iii) சம்பந்தபட்ட வழக்கு சொத்தினை அதை பாதுகாப்பு பெட்டகத்திலிருந்து வெளியே எடுத்து அதன் சிலை அகற்றி பார்க்காமல் அதன் வடிவத்தினையும், வகையையும் படத்தின் மூலம் பார்வையிட முடியும்.
iv) தேவைப்படும் தகவல்களை அதன் தன்மைக்கேற்ப பல்வேறு வகையான படிவங்களில் உருவாக்க முடியும்
v) வழக்கு சொத்து நீதிமன்றத்திற்கு எடுத்து சென்று வருவது போன்றவற்றை இந்த மென்பொருள் மூலம் முறையாகவும் மற்றும் எளிமையாகவும் கண்காணிக்க முடியும் எனவும் சென்னை பெருநகர காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.