தமிழ்நாடு

உடல்நிலை பாதிப்பு காரணமாக கல்லூரியில் விண்ணப்பிக்க தாமதம்.. கண்ணீருடன் நின்ற மாணவிக்கு உதவிய அமைச்சர் !

உடல்நிலை பாதிப்பு காரணமாக கல்லூரியில் விண்ணப்பிக்க தாமதம்.. கண்ணீருடன் நின்ற மாணவிக்கு உதவிய அமைச்சர் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் சாமநத்தம் என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு வேல்முருகன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். கூலி தொழில் செய்து வரும் இவரது மகள் நந்தினி. அரசுப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து 600-க்கு 546 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். எனவே மாணவி கல்லூரிக்கு விண்ணப்பிக்க எண்ணியுள்ளார்.

ஆனால் அதற்குள்ளும் மாணவி நந்தினிக்கு அம்மை நோய் தாக்கியுள்ளது. எனவே மாணவியால் சரியான நேரத்தில் கல்லூரிக்கு விண்ணப்பிக்க இயலவில்லை. பெற்றோருக்கும் கல்வி குறித்த விழிப்புணர்வு இல்லாததால், விண்ணப்பிக்க தாமதாமாகியுள்ளது. இருப்பினும் கடைசி நேரத்தில் இணையதளம் மூலம் விண்ணப்பித்து, மாணவிக்கு மதுரை அரசு மீனாட்சி கல்லூரியில் இடம் கிடைத்ததாகவும் கூறப்படுகிறது.

உடல்நிலை பாதிப்பு காரணமாக கல்லூரியில் விண்ணப்பிக்க தாமதம்.. கண்ணீருடன் நின்ற மாணவிக்கு உதவிய அமைச்சர் !

இருப்பினும் மாணவி உடல்நிலை சரியில்லாத நேரத்தில், அவரது பெற்றோருக்கும் கல்லூரி கட்டணத்தை இணையதளம் வாயிலாக செலுத்துவது தொடர்பாக போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் கட்டணம் செலுத்த முடியாமல் தாமதம் ஆகியுள்ளது. இதனால், மாணவி நந்தினி அரசு கல்லூரியில் சேரும் வாய்ப்பு பறிபோனதாகவும் செய்திகள் வெளியாகின.

உடல்நிலை பாதிப்பு காரணமாக கல்லூரியில் விண்ணப்பிக்க தாமதம்.. கண்ணீருடன் நின்ற மாணவிக்கு உதவிய அமைச்சர் !

இந்த நிலையில் மாணவி கல்லூரியில் சேர முடியாத சூழலல் குறித்த செய்தி வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து அமைச்சர் அவர்கள் மாணவி நந்தினிக்கு மதுரை அரசு மீனாட்சி பெண்கள் கல்லூரியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடம் அவருக்கே வழங்கப்படுவதை உறுதி செய்திட மதுரை மீனாட்சி கல்லூரி முதல்வரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அறிவறுத்தினார்.

மேலும் கல்லூரியில் சேர்ந்து படிக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கல்லூரியின் முதல்வரிடத்தில் கேட்டுக்கொண்டார். மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அவர்களின் பரிந்துரையின் பேரில் மாணவி நந்தினி உடனடியாக கல்லூரி கட்டணம் செலுத்த வழிவகை செய்யப்பட்டு, அவர் மதுரை மீனாட்சி அரசு கல்லூரியில் பி.காம் பாடப் பிரிவில் சேர்ந்து படிக்க கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

banner

Related Stories

Related Stories