தமிழ்நாடு

தமிழ்நாட்டு வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கது: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முதலமைச்சர் வரவேற்பு!

ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தத் தடையில்லை என்று உச்சநீதிமன்ற தீர்ப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.

தமிழ்நாட்டு வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கது: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முதலமைச்சர் வரவேற்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என பீட்டா அமைப்பு மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து இருந்தனர். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தி வந்தது.

இந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தத் தடையில்லை என்றும் தமிழ்நாடு அரசு இயற்றிய சட்டம் செல்லும் என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தமிழ்நாட்டு வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கது: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முதலமைச்சர் வரவேற்பு!

இந்நிலையில், இந்த தீர்ப்பு தமிழ்நாட்டு வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,"தமிழர்தம் வீரத்தையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தத் தடையில்லை என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்திருப்பது தமிழ்நாட்டு வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கது!

தமிழ்நாடு அரசு கொண்டு வந்த அவசரச் சட்டம் செல்லும் என்பதை நிலைநாட்ட அரசு நடத்திய சட்டப் போராட்டத்துக்கு மகத்தான வெற்றி கிடைத்துள்ளது. அலங்காநல்லூரில் மாபெரும் ஜல்லிக்கட்டு மைதானத்தை நாம் கட்டி வருகிறோம். வரும் சனவரி மாதம் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு வெற்றி விழாவைக் கொண்டாடுவோம்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories