தமிழ்நாடு

”நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சாதி மதம் கிடையாது”.. பால பிரஜாபதி அடிகளார் பாராட்டு!

இன்று ஆட்சி செய்கிற நமது முதலமைச்சருக்கு சாதியும் இல்லை. மதமும் இல்லை பால பிரஜாபதி அடிகளார் புகழாரம் சூட்டியுள்ளார்.

”நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சாதி மதம் கிடையாது”.. பால பிரஜாபதி அடிகளார் பாராட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பட்டியலின பழங்குடி மக்கள் உரிமை மீட்பு மாநாடு விழுப்புரம் பேருந்து நிலையம் அருகில் நகராட்சி திடலில் நேற்று நடைபெற்றது.

இதில் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, சி.பி.எம் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், பால பிரஜாபதி அடிகளார், ரவிக்குமார் எம்பி (வி.சி.க), மு.செந்திலதிபன் (ம.தி.மு.க), தி.வேல்முருகன் எம்எல்ஏ (தமிழக வாழ்வுரிமைக் கட்சி), துரை சந்திரசேகரன் (திராவிடர் கழகம்), கு.ஜக்கையன் (ஆதித்தமிழர் கட்சி) உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

”நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சாதி மதம் கிடையாது”.. பால பிரஜாபதி அடிகளார் பாராட்டு!

இந்த மாநாட்டில் பேசிய பால பிரஜாபதி அடிகளார், "நான் இங்கு உரையாற்ற வரவில்லை. நன்றி சொல்லதான் வந்தேன். கம்யூனிஸ்டுகள் நடத்துகிற இந்த மாநாட்டில்தான் ஐயா வைகுண்டர் மற்றும் வள்ளலார் ஆகியோரை அறிமுகம் செய்துள்ளீர்கள்.

பேய் இருக்கிறது என்று பேசுகிறார்கள். ஆனால் பேய் விரட்டுபவர்கள் இருக்கிறார்கள். ஆனால் பேயை இதுவரை யாரும் பிடித்து தந்தது இல்லை. இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் பேய் விரட்டுபவன் இருப்பான். ஆனால் பேய் இருக்காது. இதுபோல்தான் சாதி.

”நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சாதி மதம் கிடையாது”.. பால பிரஜாபதி அடிகளார் பாராட்டு!

இறைவன் இடதுசாரி. ஈசன் இடது சாரி. எல்லா சமயங்களும் இடதுசாரிகள்தான். ஆனால் சமயங்கள் வலதுசாரிகளிடம் இருக்கிறது. இதைநாம் கைப்பற்ற வேண்டும். இது நமது உரிமை.

ஆட்சி செய்கிறவர்களுக்கு மதமும் இருக்கக் கூடாது. சாதியும் இருக்கக் கூடாது. இன்று ஆட்சி செய்கிற நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சாதியும் இல்லை. மதமும் இல்லை. மொழி இருக்கிறது. இனமான உணர்வு இருக்கிறது. இது ஒரு பொற்காலம். இப்போது சாதிக்கவில்லை என்றால் எப்போது சாதிப்போம்?" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories