சென்னை அடுத்துள்ள போரூர் ஏரியில் முத்து என்ற 60 வயது முதியவர் ஒருவர் தண்ணீர் குடிப்பதற்காக ஏரியில் இறங்கியுள்ளார். அப்போது அவர் தவறி ஏரியில் விழுந்துவிட்டார். பிறகு அவர் தன்னை காப்பாற்றும் படி தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது அந்த வழியாக மூன்று வாலிபர்கள் வந்துள்ளனர். முதியவர் தண்ணீரில் விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனே அவரை மீட்க முயன்றனர்.
மூன்று வாலிபர்களும் ஒருவர் மாறி ஒருவர் கை கோர்த்துக் கொண்டு மனிதச் சங்கிலி போல் ஏரியின் தடுப்பில் சாய்ந்து கொண்டு முதியவர் கையை பிடித்து மேலகொண்டுவந்துள்ளனர். இதைப்பார்த்த அங்கிருந்த மக்கள் துணிச்சலுடன் முதியவரை மீட்ட மூன்று வாலிபர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும், "நீங்கள் மட்டும் என்னைக் காப்பாற்றவில்லை என்றால் நான் தண்ணீரில் மூழ்கி இறந்து இருப்பேன்" எனக் கண்ணீர் மல்க வாலிபர்களுக்கு முதியவர் நன்றி தெரிவித்தது அங்கிருந்தவர்களைக் கண்கலங்க வைத்துள்ளது.