தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று இந்து சமய அறநிலையத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் அமைச்சர் சேகர்பாபு புதிதாக 249 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-
1. இராமேசுவரம் அருள்மிகு இராமநாத சுவாமி திருக்கோயிலுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.50 கோடி அரசு மானியம் வழங்கப்படும்.
2. மரபுசார்ந்த கிராம தெய்வங்களின் சுடுமண் சிற்பங்களான அம்மன், அய்யனார், ஏழு கன்னிமார்கள் போன்ற திருவுருவங்களைச் சீரமைத்துப் பாதுகாக்கும் பணி முதற்கட்டமாக 6 திருக்கோயில்களில் ரூ.3 கோடியில் மேற்கொள்ளப்படும்.
3. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வட்டம் முன்னூர் அருள்மிகு ஆடவல்லீஸ்வரர் திருக்கோயிலில் ரூ.4.10 கோடியில் ஏழுநிலை இராஜகோபுரம் கட்டப்படும்.
4. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம் கீழப்பழையாறை அருள்மி சோமநாதசுவாமி திருக்கோயிலில் ரூ.3.50 கோடியில் ஐந்து நிலை இராஜகோபுரம் கட்டப்படும்.
5. திருச்செங்கோடு நகர் அருள்மிகு அர்த்தநாரீசுவரர் திருக்கோயிலில் ரூ.2.63 கோடியில் புதிய திருத்தேர் செய்யப்படும்.
6. 16 திருக்கோயில்களில் ரூ.7.20 கோடியில் புதிய திருத்தேர்கள் செய்யப்படும்.
7. திருவண்ணாமலை மற்றும் சமயபுரம் திருக்கோயில்களின் கோபுரங்கள் ரூ. 20.92 கோடியில் வண்ணங்கள் ஒளிரும் வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்படும்.
8. 22 திருக்கோயில்களின் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ரூ.39.83 கோடியில் குடியிருப்புகள் கட்டப்படும்.
9. திருக்கோயில்களில் வழங்கப்பட்டு வரும் அன்னதானம் மற்றும் பிரசாதம் தரமாக வழங்கப்படுவதை உணவு பாதுகாப்பு நிறுவனம் மூலம் தரம் உறுதி செய்யப்படும்.
10. பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் மற்றும் கோவை அனுவாவி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலுக்கு புதிய கம்மிவட ஊர்த்தி ரூ.46 கோடியில் அமைக்கப்படும்.
11. திருச்சி மாவட்டம் அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில், ஈரோடு மாவட்டம் அருள்மிகு வேலாயுதசுமி திருக்கோயில், தஞ்சாவூர் மாவட்டம் அருள்மிகு சோமநாதசுவாமி திருக்கோயில்களில் ரூ.12.50 கோடியில் இராஜகோபுரம் கட்டப்படும்.
12. 2000 திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாத ஊக்கத் தொகை ரூ.1000 வழங்கப்படும்.
13. ஓய்வுபெறும் திருக்கோயில் பணியாளர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.3000 லிருந்து ரூ.4000ஆக உயர்த்தியும் பொங்கல் கொடையாக ரூ.1000 வழங்கப்படும்.
14. கன்னியாகுமரி மாவட்டத்தில் சிதிலமடைந்த100 திருக்கோயில்களுக்கு ரூ.10 கோடியில் திருப்பணி மேற்கொள்ளப்படும்.
15. இராமேசுவரத்திலிருந்து காசிக்கு 300 பக்தர்கள் ஆன்மீகப் பயணமாக ரூ.75 லட்சத்தில் அழைத்துச் செல்லப்படுவார்கள்.
16. மதுரை மாவட்டம் அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலில் பொய்கைக் கரைப்பட்டி மைய மண்டபம், படிகட்டு மற்றும் பவித்ரபுஷ்கரணி தெப்ப மராமத்து பணிகள் ரூ.5.50 கோடியில் மேற்கொள்ளப்படும்.
17. திருவண்ணாமலையில் உள்ள 7 தீர்த்தக்குளங்களும் ரூ.3 கோடியில் சீரமைக்கப்படும்.
18. மானசரோவர் புனிதத் தலத்திற்கு முதன்முறையாக ஆன்மீகப் பயணம் செல்லும் 500 பக்தர்களுக்கு வழங்கி வந்த அரசு மானியம் ரூ.40,000 லிருந்து ரூ.50,000 ஆக உயர்வு மற்றும் முக்திநாத் புனிதத் தலத்திற்கு முதன்முறையாக ஆன்மீக யாத்திரை செல்லும் 500 பக்தர்களுக்கு வழங்கி வந்த அரசு மானியம் தலா ரூ.10,000 லிருந்து ரூ,25,000 ஆக உயர்வு.
20. திருச்சி அருள்மிகு ஜெம்புகேசுவரர், அகிலாண்டேசுவரி திருக்கோயில் மற்றும் மதுரை, ஆருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்களில் மாக சிவராத்திரி பெருவிழா கொண்டாடப்படும்.
21. திருக்கோயில்களில் உள்ள பழங்கால மூலிகை சுவரோவியம் ஓலைச்சுவடிகள் மற்றும் மூலிகை ஒவியங்களை பாதுகாக்க ரூ.5 கோடியில் சென்னை ஆணையர் அலுவலகத்தில் ஆய்வு மையம்.
22. 745 திருக்கோயில்களில் ரூ.331 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
23. மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிப் பெண்கள், பச்சிளம் பிள்ளைகளுடன் வரும் பக்தர்கள் விரைவு தரிசனம் செய்ய தனி வரிசை ஏற்படுத்தப்படும்.