தமிழ்நாடு

போலி சாப்ட்வேரில் ரயில்வே டிக்கெட் விற்பனை.. ஆன்லைனில் நூதன மோசடியில் ஈடுபட்ட மர்ம கும்பல்: பகீர் தகவல்!

போலி சாப்ட்வேரில் ரயில்வே டிக்கெட்டை அதிக விலைக்கு டிக்கெட்டை விற்ற 2 பேரை போலிஸார் கைது செய்துள்ளனர்.

போலி சாப்ட்வேரில் ரயில்வே டிக்கெட் விற்பனை.. ஆன்லைனில் நூதன மோசடியில் ஈடுபட்ட மர்ம கும்பல்: பகீர் தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகத்தில் வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் மோசடி கும்பல் ஐ.ஆர்.சி.டி.சி மென்பொருளுக்குள் சென்று விரைவாக ஆன்லைனில் இரயில் டிக்கெட் முன்பதிவு செய்து டிக்கெட் விலையை விட ரூபாய் 200, 300 அதிக விலைக்கு விற்பதாக ரயில்வே துறையில் சீனியர் டிவிஷ்னல் செக்யூரிட்டி கமிஷனர் ராமகிருஷ்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அந்த ரகசிய தகவலின் அடிப்படையில், ரயில்வே துறை விழுப்புரம் ஆய்வாளர் அருண்குமார் திருவண்ணாமலை மாவட்ட ரயில்வே துறை உதவி ஆய்வாளர் ஆதித்யாகுப்தா, சைபர் செல் உதவி ஆய்வாளர் அரிகிருஷ்ணன் உள்ளிட்ட 8 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு, கடந்த இரண்டு மாதங்களாக தீவிரமாக கண்காணித்து வந்துள்ளனர்.

போலி சாப்ட்வேரில் ரயில்வே டிக்கெட் விற்பனை.. ஆன்லைனில் நூதன மோசடியில் ஈடுபட்ட மர்ம கும்பல்: பகீர் தகவல்!

இந்த நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் வேலூர், காட்பாடி, சி.எம்.சி மருத்துவமனை பகுதிகளில் உள்ள சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட கடைகளில் ரயில்வே துறை தனிப்படை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் SOFTWARE பயன்படுத்தி I.R.C.T.C இணைய தளத்திற்குள் சென்று விரைவாக டிக்கெட் முன் பதிவு செய்வது கண்டுபிடிக்கப்பட்டு, இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில் அந்த SOFTWAREயை ஆன்லைனில் TATKAL SOFTWARE ALL.IN என்ற இணையதளத்தின் மூலம் வாங்கியதை தவிர வேறு எதுவும் தெரியாது என்று தகவல் கிடைத்துள்ளது. இவர்களிடம் இருந்து கைப்பற்றிய SOFTWARE மற்றும் TATKAL SOFTWARE ALL.IN என்ற இணையதளத்தை வைத்து ரயில்வே துறை சைபர் கிரைம் போலிஸார் தீவிரமாக கண்காணித்த போது, பீகார் பகுதியில் உள்ள ஒரு நபரிடம் இருந்து இந்த SOFTWARE விற்பனை செய்யப்பட்டதாக சைபர் கிரைம் போலிஸார் கண்டறிந்தனர்.

போலி சாப்ட்வேரில் ரயில்வே டிக்கெட் விற்பனை.. ஆன்லைனில் நூதன மோசடியில் ஈடுபட்ட மர்ம கும்பல்: பகீர் தகவல்!

தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கடந்த ஆண்டு செப்டம்பா் 9-ம் தேதி தனிப்படை போலீசார் பீகார் விரைந்தனர். அங்கு தீவிரமாக கண்காணித்த தனிப்படை ரயில்வே துறை போலிஸார் SOFTWARE விற்பது 27 வயதான சைலேஷ்யாதவ் என்பதும், இவர் பீகார் மாநிலம் தானாபூர் பகுதியில் இருந்து செயல்பட்டு வருவதை கண்டறிந்து ரயில்வேத்துறை தனிப்படை போலிஸார் சைலேஷ் யாதவை கைது செய்தனர். பின்னா் வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

தனிப்படை ரயில்வே துறை போலிஸார் சைலேஷ்யாதவிடம் நடத்திய விசாரணையில் சைலேஷ்யாதவ் TATKAL SOFTWARE ALL.IN என்ற இணையதளத்தை உருவாக்கி சுமார் பத்துக்கும் மேற்பட்டவர்களிடமிருந்து I.R.C.T.C என்ற சாப்ட்வேருக்குள் சென்று டிக்கெட் முன்பதிவு செய்வது போல் சாப்ட்வேரை உருவாக்கியவரிடம் இருந்து வாங்கி தன்னுடைய இணையதளத்தில் அறிமுகப்படுத்தி நாடு முழுவதும் சுமார் 3485 பேரிடம் 2000 முதல் 3500 ரூபாய் வரை இரயில் டிக்கெடை விற்றுள்ளனர். இதில் பல லட்சம் ரூபாய்யை இவா்களுக்கு வருமானம் கிடைத்துள்ளதும் தொியவந்துள்ளது.

போலி சாப்ட்வேரில் ரயில்வே டிக்கெட் விற்பனை.. ஆன்லைனில் நூதன மோசடியில் ஈடுபட்ட மர்ம கும்பல்: பகீர் தகவல்!

மேலும் சைலேஷ்யாதவுக்கு சாப்ட்வேரை விற்பனை செய்த நபர்கள் மேலும் இதில் ஈடுபட்ட நபா்கள் குறித்து ரயில்வே தனிப்படையினா் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனா்.

இந்த விசாரனையின் அடிப்படையில் ஐ.ஆர்.சிடி.சி தட்கல் டிக்கெட் முன்பதிவு தொடர்பாக போலி சாப்ட்வேர் பயன்படுத்தி ஆன்லைனில் முன்பதிவு டிக்கெட் விலையை விட அதிக விலைக்கு டிக்கெட்டை விற்ற சைலேஷ்யாதவ் என்ற நபர் கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த சம்பவத்தில் SIPF/Cyber Cell என்ற போலி சாப்ட்வேர் பயன்படுத்தி ஆன்லைனில் முன்பதிவு டிக்கெட் விலையை விட அதிக விலைக்கு டிக்கெட்டை விற்ற சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய முதன்மை குற்றவாளியான ஷம்ஷேர்ஆலம் நிசார் அகமத் என்ற முக்கிய குற்றவாளியை ரயில்வே பாதுகாப்பு படையினர் மும்பையில் வைத்து கைது செய்துள்ளனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருவதாக இரயில்வே பாதுகாப்பு படை போலிஸார் தெரிவித்தனர்.

banner

Related Stories

Related Stories