தமிழ்நாடு

“நீங்கள்தான் முதலாளிகள்..” : விழா மேடையில் வெளிப்படையாக பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி!

மக்கள் கொடுக்கின்ற மனுக்களின் மீது உரியத் தீர்வு காணத்தான் இந்த பொறுப்பில் நாங்கள் இருக்கிறோம் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

“நீங்கள்தான் முதலாளிகள்..” : விழா மேடையில் வெளிப்படையாக பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ்  பொய்யாமொழி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கருமலையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, "இந்தியாவின் நம்பர் ஒன் முதலமைச்சர் என அனைவரும் சொல்லுகின்ற வகையில் மக்களுக்கான தொடர் திட்டங்களை வழங்கி வருகிறார் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு பொதுமக்கள் கொடுத்த மனுக்களில், ஆட்சிக்கு வந்த பிறகு 100 நாட்களில் 2.5 லட்சம் மனுக்களுக்குத் தீர்வு கண்டுள்ளார் முதலமைச்சர்.

“நீங்கள்தான் முதலாளிகள்..” : விழா மேடையில் வெளிப்படையாக பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ்  பொய்யாமொழி!

அரசு அதிகாரிகளாக இருந்தாலும், அமைச்சர்களாக இருந்தாலும் எங்களிடம் முதலமைச்சர் சொல்வது ஒன்றுதான். அது, மக்கள் மனு கொடுத்தால் அதை வெறும் காகிதமாகப் பார்க்காதீர்கள். அதில் வெறும் எழுத்து மட்டும் இருப்பதாகப் பார்க்காதீர்கள். அது அவர்களுக்கான தலையெழுத்து, அவர்களுக்கான வாழ்க்கை அந்த மனுவில் அடங்கி இருக்கின்றது.

அதை மனுவைப் படித்துப் பார்த்து அதில் உடனடியாக நம்மால் எதைச் செய்ய முடியுமோ அதைச் செய்வதற்காகத்தான் நாம் இந்த பொறுப்பில் இருக்கிறோம் என்று சொல்லுவார்.

நான் உள்பட மக்கள் பிரதிநிதிகள் யாராக இருந்தாலும் எங்களை இந்த இடத்தில் உட்கார வைத்த முதலாளிகள் நீங்கள் தான் (மக்கள் தான்). நீங்கள் சொல்வதைச் செய்வதற்குத் தான் நாங்கள் இருக்கிறோம். உங்களின் நம்பிக்கையைக் காக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories