பிரதமர் மோடியை அவமதித்தாக ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டுக்குச் சிறை தண்டையை விதித்துத் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு வழங்கிய 24 மணி நேரத்திற்குள் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தியை ஒன்றிய அரசு தகுதி நீக்கம் செய்துள்ளது.
ராகுல் காந்தி மீதான இந்த நடவடிக்கை, "ஒன்றிய அரசின் பாசிச நடவடிக்கை" என காங்கிரஸ், தி.மு.க, சி.பி.எம் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் தங்களது வலுவான கண்டனங்களைத் தெரிவித்து உள்ளன.
"நான் சாவர்க்கர் அல்ல. நான் ராகுல் காந்தி எதற்கும் அஞ்சமாட்டேன்" என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும் "மோடிக்கும் அதானிக்கும் என்ன தொடர்பு உள்ளது?. அதானி பற்றிப் பேசியபோது பிரதமர் மோடி கண்ணில் பயத்தைப் பார்த்தேன்" என டெல்லில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த போது ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்று "ராகுல் காந்தி தகுதி நீக்கம் சட்டப்படியானதா? திட்டமிட்ட ஒன்றா?" என்ற தலைப்பில் விவாதம் ஒன்றை நடத்தியது. இதில் பா.ஜ.கவை சேர்ந்த பா.ஜ.கவை சேர்ந்த நாராயணன் பங்கேற்றிருந்தார். மேலும் மூத்த பத்திரிகையாளர் ஜென்ராம், டி.என்.ரகு, சிசிகாந்த் செந்தில் ஆகியோர் இந்த விவாதத்தில் பங்கேற்று இருந்தனர்.
இந்த விவாத்தில மூத்த பத்திரிக்கையாளர் ஜென்ராம்,'லலித் மோடி, நீரவ் மோடி குறித்து ராகுல் காந்திய பேசியதைக் குறிப்பிட்டு தனது கருத்தைத் தெரிவித்துக் கொண்டிருந்தார். அப்போது வேண்டும் என்றே குறுக்கிட்ட நாராயணன், 'இப்படிக் கட்டுக்கதை சொல்லாதிங்க' என்றார். இதற்கு ஜென்ராம் 'நான் கட்டுக்கதை கூறவில்லை. உண்மையைதான் சொல்கிறேன்' என கூறினார்.
உடனே ஆவேசப்பட்ட நாராயணன், "இப்படி எங்கிட்ட காத்தி பேசாதிங்க. மூத்த பத்திரிக்கையாளர் மாதிரி நடந்து கொள்ளுங்க. எனக்கு ஒழுக்கத்தைப் பத்தி நீங்கக் கத்துக் கொடுக்க வேண்டாம்" என தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி மிரட்டினார்.
அப்போது விவாதம் நடத்திய நெறியாளர் நாராயணனை அமைதியாக இருக்கும் படி கூறினார். ஆனால் அவர் தொடர்ந்து கத்திக் கொண்டே இருந்தார். இதனால் நெறியாளர் விவாதத்தை 'சந்தக்கடையாக ஆக்காதிங்க' என்றார்.
இதனால் ஆவேசமடைந்த நாராயணன், மைக்கை கழற்றி எரிந்து, எழுந்து நின்று,"நீங்கள் பேசியது குறித்து பின் வாங்குங்கள்" என கையை நீட்டி பகிரங்கமாகவே மிரட்டினர். பா.ஜ.க நாராயணின் இந்த மிரட்டலை நேரடியாக தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
மேலும் எப்போதும் கேள்விக்கு பதில் இல்லை என்றால் நாராயணன் இப்படிதான் கத்தி கூப்பாடு போடுவதை வழக்கமாக வைத்துள்ளார் என்றுதான் அவர்கள் அனைவரும் முனுமுனுத்திருப்பார்கள்.
பா.ஜ.க நாராயணன் தொலைக்காட்சி விவாதங்களின்போது, நெறியாளர்களையும், விவாதத்தில் பங்கேற்றும் எதிர் தரப்பினரையும் இதேபோல் ஒருமையில் பேசி அவமதிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். பல விருந்தினர்கள் நாராயணன் பங்கேற்கும் விவாதத்தில் பங்கேற்க மாட்டோம் என்றும் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.