தமிழ்நாடு

“இதனால்தான் அரசியலில் இருந்து விலகினேன்” : மனம் திறந்து பேசிய நடிகர் ரஜினிகாந்த்!

அரசியலில் நான் நுழைய வேண்டும் என நினைத்தோம், அதற்குள் கோவிட் வந்து விட்டது. அதனால் தான் நான் அரசியலில் இருந்து விலகினேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

“இதனால்தான் அரசியலில் இருந்து விலகினேன்” : மனம் திறந்து பேசிய நடிகர் ரஜினிகாந்த்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை இராயப்பேட்டை மியுசிக் அகாடமியில் சேபியன்ஸ் ஹெல்த் ஃபவுண்டேஷனின் வெள்ளி விழா கொண்டாட்டம் நடைப்பெற்றது. இதில் முன்னாள் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு மற்றும் திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது விழா பேசிய நடிகர் ரஜினிகாந்த், “சிறுநீரகம் பாதிப்பு எனக்கு 60% இருந்த நிலையில், நான் ரவிசந்திரன் அவர்களிடம் மருத்துவம் பார்த்தேன். இதையடுத்து சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. நான் நல்லபடியாக இருக்கிறேன் என்றால் அவை மருத்துவர் ரவிசந்திரனால் தான். அரசியலுக்கு வர வேண்டும் என நினைக்கும் போது, கொரோனா 2வது கொரோனா அலை வந்துவிட்டது.

“இதனால்தான் அரசியலில் இருந்து விலகினேன்” : மனம் திறந்து பேசிய நடிகர் ரஜினிகாந்த்!

அப்போது மருத்துவர்கள் நீங்கள் பிரசாரம் செல்லகூடாது. அப்படி சென்றாலும் 10 அடி வரை தள்ளி நிற்க வேண்டும். முக கவசம் அணிய வேண்டும் என தெரிவித்தனர். இதனால் தான் அரசியலில் இருந்து விலகினேன்.

மது குடித்தால், புகைப்பிடித்தால் குறிப்பிட்ட உடல் உறுப்புகள் தான் பாதிக்கும். உப்பு அதிகமானல் உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தும் பாதிக்கும். எண்ணம் நன்றாக இருந்தால் மனசு நன்றாக இருக்கும். மனசு நன்றாக இருந்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

பின்னர் பேசிய முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, “ நானே தொலைபேசியில் அழைத்து அரசியலுக்கு வர வேண்டாம் என கூறினேன். அரசியல் ஆரோக்கியமற்றது, அரசியலுக்கு வந்தால் உடல்நலத்தோடு இருக்க வேண்டும். அரசியலுக்கு வந்தால் அது இருக்காது” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories