சென்னை வடபழனியை சேர்ந்த 27 வயது இளம்பெண் ஒருவரும், நிஷாந்த் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இருவருக்கும் 10-ம் வகுப்பு படிக்கும்போது இருந்தே பழக்கம் இருந்துள்ளது. நாளடைவில் அது காதலாக மாற இருவரும் நெருங்கி பழகியுள்ளனர்.
இவர்கள் பழக்கம் அடுத்தக்கட்டமாக நகர்ந்து இருவரும் உடலுறவு கொண்டுள்ளனர். இவ்வாறு இவர்கள் இருவரும் அடிக்கடி நெருக்கமாக இருந்து வந்துள்ளார். இதுவும் போக அந்த பெண்ணிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக இத்தனை ஆண்டுகளாக ரூ. 68 லட்சம் வரை வாங்கி கொண்டதாக கூறப்படுகிறது. இப்படி இருவரும் தொடர்ந்து காதலித்து வந்த நிலையில், அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்துள்ளார் நிஷாந்த்.
மேலும் நிஷாந்தின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரியவே அவர் இந்த பெண்ணை ஏமாற்றுவதை உணர்ந்துள்ளார். அதோடு இவர் வேறு பெண்ணை திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதும் அந்த பெண்ணுக்கு தெரியவந்தது. மேலும் இவரை தொடர்ந்து தவிர்த்தும் வந்துள்ளார்.
இந்த நிலையில் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் முக்கிய பொறுப்பில் உள்ள தொழிலதிபர் ஒருவரின் மகளுடன் நிஷாந்த் நிச்சயம் செய்துள்ளார். அதோடு அவரை திருமணமும் செய்ய எண்ணி அதற்கான ஏற்பாடுகளையும் தீவிரமாக செய்து வந்தார். இந்த விவகாரம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தெரிய வரவே அவர் இதுகுறித்து மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் நிஷாந்த் மீது பாலியல் வன்கொடுமை, போக்ஸோ உள்ளிட்ட வழக்குகளில் பதிவு செய்யப்பட்டு அதிகாரிகள் விசர்நாம் மேற்கொண்டு வந்தனர். அதோடு இந்த விவகாரம் பெண் வீட்டாருக்கு தெரிய வரவே அவர்கள் நிஷாந்துடன் நடைபெறவிருந்த தங்கள் மகள் திருமணத்தை நிறுத்தினர். மேலும் காவல்துறையினரும் நிஷாந்தை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில், இன்று காலை போரூர் மேம்பாலத்தின் மேல் காரை நிறுத்திவிட்டு ஒருவர் போரூர் ஏரியில் குதித்ததாக அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்த நிலையில் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து ஏரியில் குதித்த நபர் குறித்து காவல்துறை மேற்கொண்ட விசாரணையில் அது நிஷாந்த் என்பது தெரியவந்தது.
இதையடுத்து இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தன் மீது பாலியல் புகார் எழுந்ததாலும், திருமணம் நின்றுபோனதாலும் மனம் நொந்துபோன நிஷாந்த் தனது நண்பர்களுக்கு குறுந்தகவல் அனுப்பிவிட்டு போரூர் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கழக நிகழ்வுகள் மற்றும் இன்றைய முக்கிய செய்திகள் என அனைத்து செய்திகளை உடனுக்கு உடன் அறிய கலைஞர் செய்திகள் இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்!