தமிழ்நாடு

“இடம் கொடுத்தும் ஆதிச்சநல்லூர் அருங்காட்சியக பணியை ஒன்றிய அரசு இன்னும் தொடங்க வில்லை”: கனிமொழி MP ஆவேசம்!

தூத்துக்குடி அருகே கடம்பா குளத்தில் உபரி நீர் கால்வாய் சீர்அமைத்து தூர்வாரும் பணிகளை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கனிமொழி எம்.பி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

“இடம் கொடுத்தும் ஆதிச்சநல்லூர் அருங்காட்சியக பணியை ஒன்றிய அரசு இன்னும் தொடங்க வில்லை”: கனிமொழி MP ஆவேசம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் அடுத்துள்ள பெரிய குளமான கடம்பா குளத்தில் இருந்து வெளியேறும் உபரி நீரை கால்வாய் சீரமைக்கப்படாமல் இருந்து வந்தது. இதனால் மழை வெள்ள காலங்களில் மழைநீர் வெளியிட முடியாத நிலைஇருந்து வந்தது.

இதைத்தொடர்ந்து நீர்ப்பாசன துறை சார்பில் சுமார் 34 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து உபரிநீர் கால்வாய் தூர்வாரும் பணி மேலும் நான்கு குளங்களை சீரமைக்கும் பணி இதுபோல், கரைகளை பலப்படுத்துவது உள்ளிட்ட பணிகள் செய்வதற்கு உத்தரவிடப்பட்டு இதைத்தொடர்ந்து இதன் தொடக்க விழா இன்று நடைபெற்றது.

“இடம் கொடுத்தும் ஆதிச்சநல்லூர் அருங்காட்சியக பணியை ஒன்றிய அரசு இன்னும் தொடங்க வில்லை”: கனிமொழி MP ஆவேசம்!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தி.மு.க துணை பொது செயலாளர் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்.பி., “மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு இந்த பணிகளை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து இதைத்தொடர்ந்து பேசிய கனிமொழிய எம்.பி, விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான இந்த கால்வாயை தூர் வாருவதற்கான பணிகள் சுமார் 34 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தப் பகுதியில் உள்ள கால்வாய்கள் சீரமைக்கப்பட்டு குளங்களும் சீரமைக்கப்படும் என தெரிவித்தவர்.

“இடம் கொடுத்தும் ஆதிச்சநல்லூர் அருங்காட்சியக பணியை ஒன்றிய அரசு இன்னும் தொடங்க வில்லை”: கனிமொழி MP ஆவேசம்!

இந்த பகுதியில் உள்ள பல்வேறு சாலைகள் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைத்து புதிய சாலைகள் அமைப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இதுபோல் இந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கடம்பா குளம் தூர் வருவதற்கான நடவடிக்கைகளும் விரைவில் எடுக்கப்படும். நீண்ட நாள் கோரிக்கையை உடனே நிறைவேற்றி தந்த தமிழக அரசுக்கும் கனிமொழி எம்பிக்கும் விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்.பி., ஆதிச்சநல்லூரில் அகழ்வாராய்ச்சி பணிகள் ஒன்றிய அரசு மூலம் நடைபெற்று தற்போது நிறைவு பெற்றுள்ளது. இந்த பகுதியில் ஒன்றிய அரசு சார்பில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

“இடம் கொடுத்தும் ஆதிச்சநல்லூர் அருங்காட்சியக பணியை ஒன்றிய அரசு இன்னும் தொடங்க வில்லை”: கனிமொழி MP ஆவேசம்!

அதற்கான இடத்தையும் தமிழ்நாடு அரசு தேர்வு செய்து வழங்கி விட்ட நிலையில், தற்போது வரை அந்த பணிகள் நடைபெறவில்லை, இது குறித்து வருகிற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கேள்வி எழுப்ப உள்ளளேன். மேலும் ஒன்றிய அமைச்சரிடமும் இதுகுறித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளதாகவும் கனிமொழி எம்.பி. தெரிவித்தார்

இதைத்தொடர்ந்து புன்னைகாயல் கிராமத்தில் செயல்பட்டு வந்த கிளை தபால் நிலையத்தை துணை தபால் நிலையமாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த தபால்நிலையத்தை திறந்துவைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்.பி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர் .

இதைத் தொடர்ந்து ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளை ஊராட்சியில் உள்ள உப்பாத்து ஓடையில் ஓடக்கூடிய தண்ணீரின் நிறம் மாறி சிவப்பு நிறமாக உள்ளது என கனிமொழி எம்.பி.க்கு புகார் வந்தது இதை தொடர்ந்து, அந்த பகுதியில் நேரில் ஆய்வு மேற்கொண்டு தண்ணீர் மாற்றத்திற்காக காரணம் குறித்து அதிகாரியிடம் கேட்டறிந்தனர். இது குறித்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டனர்

banner

Related Stories

Related Stories