தமிழ்நாடு

சாலையில் அட்டகாசம் செய்த ரசிகர்கள்.. TTF வாசன் மீது மீண்டும் வழக்கு பதிவு.. போலிஸார் அதிரடி !

TTF வாசனின் ஆதரவாளர்களின் செயலால் TTF வாசன் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் போலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சாலையில் அட்டகாசம் செய்த ரசிகர்கள்.. TTF வாசன் மீது மீண்டும் வழக்கு பதிவு.. போலிஸார் அதிரடி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் TTF வாசன். இவர் இருசக்கர வாகனத்தில் ஊர் ஊராகப் பணம் செய்து தனது அனுபவங்களை யூடியூபில் பதிவேற்றி வெளியிட்டு வருகிறார். இவரின் Twin Throttlers என்ற யூடியூப் பக்கத்திற்கு 20 லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ் உள்ளனர். மேலும் இவருக்கு இந்த வீடியோக்கள் மூலம் ஏராளமான ரசிகர்கள் உருவாகியுள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் அதிவேகமாக வாகனம் ஓட்டி பெரும் சர்ச்சையில் சிக்கிய நிலையில், உயிர்க்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாக இரு சக்கர வாகனத்தை இயக்கியதாக TTF வாசன் மீது கோவை போத்தனூர் போலிஸார் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர் வழக்குப்பதிவு செய்தனர்.

சாலையில் அட்டகாசம் செய்த ரசிகர்கள்.. TTF வாசன் மீது மீண்டும் வழக்கு பதிவு.. போலிஸார் அதிரடி !

அதைத் தொடர்ந்து ஊடகத்தினரை மிரட்டும் விதத்தில் TTF வாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், வழக்கில் இருந்து கைது செய்வதில் இருந்து தப்பிக்க பெங்களூரு நோக்கி இருசக்கர வாகனத்தில் தப்பிக்க முயன்ற TTF வாசனை சூலூர் போலிஸார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அதன்பின்னர் காவல் நிலைய ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், கடலூர் புதுப்பாளையம் பகுதியில் திரைப்பட இயக்குனர் ஒருவரின் அலுவலகத்தை திறந்து வைப்பதற்காக யூடியூபர் TTF வாசன் கடலூர் வருகை புரிந்தார். அப்போது அவரை காண ஏராளமான பைக் பிரியர்கள் அந்த இடத்தில குவிந்ததால் அது பெரும் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டது.

சாலையில் அட்டகாசம் செய்த ரசிகர்கள்.. TTF வாசன் மீது மீண்டும் வழக்கு பதிவு.. போலிஸார் அதிரடி !

இதனால் போலீசார் அங்கு திரண்டவர்களை விரட்டி அடித்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய 200க்கும் மேற்பட்ட இரண்டு சக்கர வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.மேலும், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியது, மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக கூட்டம் கூட்டியது உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories