தமிழ்நாடு

YOUTUBE-ல் அதிகம் TREND-ஆன வீடியோ பட்டியல் வெளியீடு.. இதில் இடம்பிடித்த ஒரே தமிழ் வீடியோ என்ன தெரியுமா?

இந்தியாவில் அதிகம் ட்ரெண்ட்டான வீடியோக்கள் பிரபலமான படைப்பாளிகளின் பட்டியலை யூடியூப் வெளியிட்டுள்ளது.

YOUTUBE-ல் அதிகம் TREND-ஆன வீடியோ பட்டியல் வெளியீடு.. இதில் இடம்பிடித்த ஒரே தமிழ் வீடியோ என்ன தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உலகளவில் பிரபலமான சமூகவலைத்தளம் என்றால் அது யூடியூப்தான். கூகுள் நிறுவனத்துக்கு சொந்தமான வலைத்தளமான யூடியூப்பில் எண்ணமுடியாத அளவு கோடிக்கணக்கான விடீயோக்கள் அதில் பதிவேற்றப்பட்டுள்ளன.

இந்த சமூகவலைத்தளத்தில் யார்வேண்டுமானாலும் வீடியோவை பதிவு செய்யாமல் என்பதால் லட்சக்கணக்கானோர் தங்கள் உருவாகும் வீடியோக்களை தினந்தோறும் அதில் பதிவேற்றிவருகின்றனர். அதில் சிலரின் வீடியோக்கள் இணைய பயனர்களால் அதிகம் பார்க்கப்படுவது வழக்கம்.

YOUTUBE-ல் அதிகம் TREND-ஆன வீடியோ பட்டியல் வெளியீடு.. இதில் இடம்பிடித்த ஒரே தமிழ் வீடியோ என்ன தெரியுமா?

அந்த வகையில் இந்தியாவில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோக்கள் பிரபலமான படைப்பாளிகளின் பட்டியலை யூடியூப் வெளியிட்டுள்ளது. முதல் 10 பிரபலமான வீடியோக்கள், முதல் 10 இசை வீடியோக்கள் மற்றும் முதல் 10 குறும்படங்கள். 2022 ஆம் ஆண்டின் பிரேக்அவுட் கிரியேட்டர்கள், பிரேக்அவுட் வுமன் கிரியேட்டர்கள் மற்றும் அந்த ஆண்டிற்கான ஒட்டுமொத்த முதல் தரவரிசை படைப்பாளர்களையும் YouTube தரவரிசைப்படுத்தியுள்ளது.

அதன்படி மொராதாபாத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபர் வாசிம் அஹ்மத், நஜிம் அஹ்மத் மற்றும் ஜெய்ன் சைஃபி ஆகியோரின் ‘AgeofWater’ எனும் குறும்படம் ட்ரெண்டிங் விடீயோஸ் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளது. ‘Sasta Shark Tank’ என்னும் வீடியோ இரண்டாம் இடத்தையும், 'INDIAN FOOD MAGIC' என்னும் உணவு தொடர்பான வீடியோ மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது.

YOUTUBE-ல் அதிகம் TREND-ஆன வீடியோ பட்டியல் வெளியீடு.. இதில் இடம்பிடித்த ஒரே தமிழ் வீடியோ என்ன தெரியுமா?

இந்த பட்டியலில் நடிகர் விஜயின் பிரஸ்ட் படத்தில் இடம்பெற்ற பிரபல தமிழ் பாடலான 'அரபிக் குத்து' பாடலின் சிங்கிள் வீடியோ ப்ரோமோ நான்காம் இடம் பிடித்து அசத்தியுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து டாப்-10ல் இடம்பெற்ற ஒரே விடியோவாகவும் இது இடம்பெற்றுள்ளது.

banner

Related Stories

Related Stories