தமிழ்நாடு

“கிடைத்த கேப்பில் இந்தியை திணித்த ரயில்வே” : இந்தியில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கரை கிழித்து எறிந்த அதிகாரிகள்!

திருப்பூர் ரயில் நிலையத்தில் இந்தி அறிவிப்பு சுவரொட்டியை அதிகாரிகள் பதாகையை கிழித்து எறிந்தனர்.

“கிடைத்த கேப்பில் இந்தியை திணித்த ரயில்வே” : இந்தியில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கரை கிழித்து எறிந்த அதிகாரிகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

திருப்பூர் ரயில் நிலையத்தில் உள்ள தகவல் மையத்தில் ஆங்கிலத்தில் இன்பர்மேஷன் சென்டர், தமிழில் சேவை மையம் மற்றும் இந்தியிலும் எழுதப்பட்டிருந்தது. இந்நிலையில் புதிதாக அச்சிடப்பட்ட பேப்பர் அறிவிப்பு பதாகை சேவை மையத்தின் முன்பு ஒட்டப்பட்டது.

இதில் இந்தி எழுத்துக்களில் சகயோக் என எழுதப்பட்டிருந்தது. அதிக அளவில் வடமாநில தொழிலாளர்கள் வருவதால் அவர்களுக்கு புரியும் வகையில் எழுதப்பட்டிருப்பதாக பலரும் எண்ணிய நிலையில், அதன் மேலே ஆங்கிலத்திலும் சகயோக் எனவும் தமிழ் எழுத்திலும் சகயோக் என அச்சிடப்பட்டிருந்தது.

இதனால் அதன் அர்த்தம் பலருக்கும் புரியாத சூழல் ஏற்பட்டது. இந்தியில் சகயோக் என எழுதப்பட்டால் ஆங்கிலத்தில் இன்பர்மேஷன் சென்டர் எனவும் தமிழில் சேவை மையம் என எழுதப்பட்டால் தானே அனைத்து மொழியினருக்கும் புரியும்.

அதைவிடுத்து அனைத்து மொழியினரும் சகயோக் என படித்தால் அதன் அர்த்தத்தை எப்படி புரிந்து கொள்வது. இது அப்பட்டமான இந்தி திணிப்பு என புகைப்படத்துடன் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து சுதாரித்த ரயில்வே அதிகாரிகளால் சேவை மையத்தின் முன்பு ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பு பெயர் பதாகை கிழிக்கப்பட்டு அகற்றப்பட்டது.

banner

Related Stories

Related Stories