தமிழ்நாடு

எமொ்ஜென்சி லைட்டிற்குள் தங்கக்கட்டி.. 1.8 கிலோ தங்கத்தை கடத்தி பெண் பயணி - ஏர்போட்டில் சிக்கியது எப்படி?

மலேசியாவிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.80 லட்சம் மதிப்புடைய 1.8 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.

எமொ்ஜென்சி லைட்டிற்குள் தங்கக்கட்டி.. 1.8 கிலோ தங்கத்தை கடத்தி பெண் பயணி - ஏர்போட்டில் சிக்கியது எப்படி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மலேசிய நாட்டு தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா பயணிகள் விமானம், நேற்று நள்ளிரவு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனா்.

அப்போது ஒரு பெண் பயணி சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி அவருடைய உடைமைகளை சோதனையிட்டனர். அவருடைய சூட்கேஸ்க்குள் புதிய எமர்ஜென்சி லைட் ஒன்று இருந்தது.

எமொ்ஜென்சி லைட்டிற்குள் தங்கக்கட்டி.. 1.8 கிலோ தங்கத்தை கடத்தி பெண் பயணி - ஏர்போட்டில் சிக்கியது எப்படி?

அந்த அதிகாரிகள் அந்த எமா்ஜென்சி லைட்டை எடுத்து பார்த்த போது, அது வழக்கத்தை விட அதிக கனமாக இருந்தது. இதை அடுத்து அந்த விளக்கை கழட்டி பார்த்து சோதித்தனா். அதனுள் தங்கக்கட்டிகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுப்பிடித்தனா்.

எமா்ஜென்சி லைட்டிற்குள் 1.8 கிலோ தங்க கட்டிகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூபாய் 80 லட்சம். இதை அடுத்து சுங்க அதிகாரிகள் தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்தனர்.மலேசிய நாட்டிலிருந்து தங்கத்தை நூதனமான முறையில் கடத்தி வந்த பெண் பயணியை கைது செய்து, அவரிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories