தமிழ்நாடு

தொழிற்சாலையில் கொழுந்துவிட்டு எரிந்த தீ.. 13 வாகனங்கள்: 8 மணி நேரம் போராடிய தீயணைப்பு வீரர்கள்!

ஆம்பூர் அருகே தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தால் பல கோடி ரூபாய் மதிப்பிலான உதிரி பாகங்கள் எரிந்து நாசமாகின.

தொழிற்சாலையில் கொழுந்துவிட்டு எரிந்த தீ.. 13  வாகனங்கள்: 8 மணி நேரம் போராடிய தீயணைப்பு வீரர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சின்னவரிகம் பகுதியில் பரிதா குழுமத்திற்கு சொந்தமான (பரிதா ஷூ பிரைவேட் லிமிடெட் பாம்ஸ் யூனிட்) இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் சாண்டல்ஸ் & காலணி மற்றும் செப்பல்ஸ் ஆகியவை தயாரிக்கப்படுகிறது. சுமார் 1000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்,பெண் தொழிலாளர்கள் பணபுரிகின்றனர்.

இந்நிலையில் தொழிற்சாலை பின்புறம் உள்ள குடோனில் இருந்து திடீரென கரும்பு புகையுடன் தீ பற்றி எரிந்து வருவதை அறிந்த தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சாலை நிர்வாகத்தினர் உடனடியாக ஆம்பூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் தீ விபத்து ஏற்பட்டதால் தொழிற்சாலையில் இருந்து உடனடியாக தொழிலாளர்களை தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றினர்.

தொழிற்சாலையில் கொழுந்துவிட்டு எரிந்த தீ.. 13  வாகனங்கள்: 8 மணி நேரம் போராடிய தீயணைப்பு வீரர்கள்!

பின்னர் தீ டோன் முழுவதும் பரவியது இதில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வைக்கப்பட்டிருந்த காலணி உதிரி பாகங்கள் முற்றிலுமாக எரிந்து நாசமாகின மேலும் குடோன் முழுவதும் தீ பரவியதால் ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 13 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்களை வரவழைத்து சுமார் 8 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொழிற்சாலையில் கொழுந்துவிட்டு எரிந்த தீ.. 13  வாகனங்கள்: 8 மணி நேரம் போராடிய தீயணைப்பு வீரர்கள்!

மேலும் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமாக என உமராபாத் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தீ விபத்தில் இதுவரை உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என போலிஸார் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories