பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சஞ்சய் தாஸ். இவர் கோவை ஆர்.எஸ். புரத்தில் சலூன் கடை ஒன்று நடத்தி வருகிறார். இந்த கடையில் பீகாரைச் சேர்ந்த வித்யானந்தன் என்ற வாலிபர் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் கடந்த 13ம் தேதி ஆர்.எஸ். புரத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் சலூன் கடைக்கு வந்துள்ளார். அச்சிறுவன் அங்கிருந்த வித்யானந்தனிடம் முகத்திற்கு பிளீச்சிங் செய்யும் படி கூறியுள்ளார்.
இதையடுத்து சிறுவனின் முகத்திற்கு அவர் பிளீச்சிங் செய்துள்ளார். அப்போது திடீரென சிறுவன் முகத்தில் வெந்நீரைத் தெளித்துள்ளார். இதில் சிறுவன் முகம் வெந்து அலறி துடித்துள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்து அருகே இருந்தவர்கள் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்குச் சிறுவனுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தபோது, ஊழியர் வித்யானந்தன் கவனக்குறைவு காரணமாகவே சிறுவன் முகத்தில் வெந்நீர் தெளிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து கடை உரிமையாளர் சஞ்சய் தாஸ், ஊழியர் வித்யானந்தன் ஆகிய 2 பேரையும் போலிஸார் கைது பிறகு ஜாமினில் விடுதலை செய்துள்ளனர்.