தமிழ்நாடு

"தமிழ்நாட்டில் மதவாத கும்பலுக்கு இடமில்லை.." - அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம் !

தமிழகத்தை மற்ற மாநிலங்களை போல் எண்ண வேண்டாம் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசமாக பேசியுள்ளார்.

"தமிழ்நாட்டில் மதவாத  கும்பலுக்கு  இடமில்லை.." - அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சேலம் மாவட்டம் ஆத்தூர் அண்ணா கலையரங்கத்தில் திராவிட கழக நிர்வாகி தங்கவேலுவின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

"தமிழ்நாட்டில் மதவாத  கும்பலுக்கு  இடமில்லை.." - அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம் !

அப்போது பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், ”அன்று இடுப்பில் துண்டை கட்டிய காலத்தில் குப்பன், சுப்பன் என ஒருமையில் அழைத்தனர். ஆனால் விழா மேடைகளில் தற்போது குப்பனுக்கும், சுப்பனுக்கும் தோலில் சால்வை அணிவித்து மரியாதைக்குரிய குப்பன் அவர்களே, மரியாதைக்குரிய சுப்பன் அவர்களே என அழைக்கப்படுகிறது. இந்த நிலையை மாற்றியது திராவிட இயக்கம்” என்றார்.

"தமிழ்நாட்டில் மதவாத  கும்பலுக்கு  இடமில்லை.." - அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம் !

தொடர்ந்து பேசிய அவர், மதுரையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பா.ஜ.க-வினர் செருப்பு வீசப்பட்ட சம்பவத்தை குறிப்பிட்டு, “தமிழக முதல்வர் பொது வெளியில் அமைச்சர்கள் நாகரீகமாக பேச வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

ஆகவே கண்ணிய அரசியல் நடத்த வேண்டும் என்று நினைக்கிறோம். தயவு செய்து தமிழகத்தை மற்ற மாநிலங்களை போல் எண்ணவேண்டாம். இங்கு மதவாத கும்பலுக்கு இடமில்லை" என்று கண்டனம் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories