கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூர் தனியார் பள்ளியில் படித்து வந்த கடந்த மாதம் 13ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், கடந்த 17ம் இந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது. மேலும் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த சமூகவிரோதிகள் அங்கிருந்த வாகனங்களை தீ வைத்து கொளுத்தினர். அதேபோல் பள்ளி வகுப்பளையில் இருந்த பென்ச், சேர் உள்ளிட்ட பொருட்களை சூறையாடினர்.
மேலும் மாணவர்களின் சான்றிதழ்களையும் அவர்கள் தீ தீவைத்துக் கொளுத்தினர். இதையடுத்து இந்த வன்முறையை போலிஸார் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக 306 பேரை போலிஸார் கைது செய்திருந்தனர். மேலும் சமூக வலைதளங்களில் இந்த விவகாரத்தில் போலியான தகல்களை பரப்பியவர்களையும் போலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த வன்முறையில் ஈடுபட்ட அனைத்து கலவரக்காரர்களையும் கைது செய்வதற்காக காவல்துறையினர் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். அதேபோல் கலவரத்தில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து அவர்களை கைது செய்ய சேலம் சரக டி.ஐ.ஜி பிரவீன் குமார் அபினபு தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவினர் கண்காணிப்பு கேமரா பதிவுகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான வீடியோ பதிவுகளைக்கொண்டு, அவற்றின் உண்மை தன்மையை உறுதி செய்து, கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் பள்ளி வளாகத்தில் பூட்டி இருந்த அறையை உடைத்து மாணவர்களின் சான்றிதழ்களை தீ வைத்து கொளுத்தி சின்னசேலம் தாலுக்கா வி் .மா மந்தூர் கிராமத்தைச் சேர்ந்த லட்சாதிபதி என்பவரை சிறப்பு புலனாய்வு குழு போலிஸார் கைது செய்துள்ளனர்.