பொதுவாக மனிதர்களுக்கு இருக்கும் சில உணர்வுகளை நாம் சில விலங்குகளிடம் காண முடியும். அதில் பிரதமான ஒன்று தான் பாசம். அதிலும் தாய் பாசம் என்பது விலங்குகளிடம் சற்று அதிகமாகவே காணப்படும். குறிப்பாக குரங்கு, நாய் போன்ற விலங்குகளிடம் நாம் அந்த பாசத்தை உணரமுடியும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, பெரிய வண்டியில் மாடு ஒன்றை கூட்டிசெல்லும்போது, அதன் பின்னே கோழி ஒன்று கத்திகொண்டே சென்றது. இது குறித்த வீடியோ வைரலானது. மேலும் அண்மையில் கொல்கத்தாவில் தாய் யானை ஒன்று இறந்த தனது குட்டியை இரண்டு நாட்களாக தூக்கி சுமந்த வீடியோவும் வெளியாகி காண்போர் நெஞ்சத்தை கலங்க வைத்தது.
இது போன்ற ஒரு சம்பவம் ஒன்று உதகையில் நடந்துள்ளது. உதகை மலைப்பிரதேசம் நிறைந்த ஒரு பகுதி. இங்கே குரங்கு, கரடி, யானை, சிறுத்தை போன்ற விலங்குகள் அங்கே காணப்படுகின்றன.
இந்த நிலையில், உதகை அருகே உள்ள கல்லட்டி மலைப்பாதையில் கடந்த 2 நாளாக தாய் குரங்கு ஒன்று தனது இறந்த குட்டியின் சடலத்தை தூக்கிக்கொண்டு சுற்றி அழைந்து வருகிறது. இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வரும் நிலையில், இதனை காண்போர் நெஞ்சை உருக வைக்கிறது.
இதனை பலரும் இணையத்தில் பகிர்ந்து தாய் குரங்கின் நிலையை எண்ணி வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.