தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசுத்துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப ஆண்டுதோறும் தேர்வு குரூப் 4 தேர்வு நடைபெறும். அந்த வகையில் இந்தாண்டு நடைபெறவுள்ள தேர்வுக்கான முன்பதிவு கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறைவடைந்தது.
இந்த தேர்வானது வரும் ஜூலை 24 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், இதற்கான அனுமதி சீட்டு (Hall Ticket) அதன் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு மக்களுக்காக தமிழ்நாடு அரசு நடத்தும் இந்த தேர்வில், 7382 பணியிடங்களுக்கு 21 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், அரசின் அதிகாரபூர்வ இணையதளமான https://www.tnpsc.gov.in/ அல்லது www.tnpscexams.in சென்று தங்களது அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அதை பதிவிறக்கம் செய்யும் முன், home பக்கத்தில் இருக்கும் Exam Dashboard-ஐ கிளிக் செய்ய வேண்டும். பின்னர், அதில் COMBINED CIVIL SERVICES EXAMINATION-IV IN GROUP-IV SERVICES VIEW நேரில், ஹால் டிக்கெட் டவுன்லோட் என்று இருக்கும். அதனை கிளிக் செய்து போனால், User ID, Password கொடுத்து உள்ளே செல்ல வேண்டும். அதன் பின், உள்ளே குறிப்பிடப்பட்டிருக்கும் தேர்வு விவரங்களை அறிந்து கொள்ளலாம்.