முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நேற்று சற்று உடல் சோர்வு ஏற்பட்டதையடுத்து தன்னை அவர் மருத்துவர்களிடம் பரிசோதித்த போது கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது சமூக வலைதளப் பதிவில், கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதால், தாம் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும், அனைவரும் முகக் கவசம் அணிந்து, தடுப்பூசிகளைச் செலுத்தி பாதுகாப்பாக இருப்போம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (12.7.2022) வெளியிட்ட சமூக வலைதளப் பதிவு வருமாறு :-
இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் கொரோனா பாதிப்பில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ள நிலையிலும் அங்கிருந்து பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி வருகின்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தவகையில், முதலமைச்சருக்கு வாழ்த்து கூறி கடிதம் எழுதிய ஆட்டோ ஓட்டுநரிடம் தொலைபேசியில் அழைத்து முதலமைச்சர் நன்றி கூறியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வேலூர் மாநகர் சேண்பாக்கம் பகுதியை சார்ந்த ஆட்டோ ஓட்டுநர் பன்னீர் செல்வம் கடிதம் எழுதியிருந்தார். அதில், எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான அவர், முதலமைச்சர் வேலூர் வருகையின் போது ஆடம்பரமில்லாமல் வந்ததாகவும், போக்குவரத்து நிறுத்தப்படவில்லை என்றும், அதனால் தாங்கள் நிம்மதியாக ஆட்டோ ஓட்டியதாவும், கடிதத்தில் தெரிவித்து இருந்தார்.
ஆட்சி சிறப்பாக இருப்பதாகவும் பல நல்ல திட்டங்களை தந்து தமிழ்நாட்டை முதலமைச்சர் முன்னேற்றுவார் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாகவும் பன்னீர் செல்வம் தனது கடிதத்தில் தெரிவித்திருந்தார். அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பன்னீர் செல்வத்தை தொலைபேசியில் அழைத்து நன்றி தெரிவித்தார்.
அதேபோல், ஈரோடு வாசவி கல்லூரியில் பி.எஸ்.சி முதலாம் ஆண்டு படித்து வரும் தான், தனது வறுமையின் காரணமாக கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் இருப்பது குறித்து முதலமைச்சர் அவர்களுக்குக் கடிதம் எழுதியிருந்தார். இதனையடுத்து முதலமைச்சர் மாணவரிடம் தொலைப்பேசியில் பேசி, அமைச்சருக்கு உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் இந்த மாணவனுக்கு கல்வி கட்டணம் செலுத்தினார்.
மேலும், கோவிந்தசாமி நாயுடு காலேஜ் ஆப் பிசியோதெரபி கோவை சூலூரில் படிக்கும் அவரது தாயாரின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தங்குமம் விடுதி கடனோடு செலுத்து கோரி முதலமைச்சர் அவர்களுக்கு கடிதம் எழுதி இருந்தார். அவருக்கு வீட்டு வசதித்துறை அமைச்சர் மாணவியை அழைத்து பேசி தங்கும் விடுதி கட்டணம் செலுத்தியுள்ளார்.
அதுமட்டுமல்லாது, ஏழ்மை காரணமாக நீட் பயிற்சி மையத்தில் சேர்த்து விடக் கூறி கோரிக்கை வைத்து கடிதம் எழுதியிருந்தார். அரசு நீட் பயிற்சி மையத்தில் இடமின்மை காரணமாக மாணவனுக்குத் தேவையான அனைத்து கோர்ஸ் மெட்டீரியல்களையும் முதலமைச்சர் தனிப்பிரிவு மூலம் மாவட்ட நிர்வாகத்திடம் கூறி, வீட்டிற்கு சென்று வழங்கப்பட்டது.
இதனிடையே, வெண்ணந்தூர் ஒன்றியத்தைச் சேர்ந்த இந்த மாணவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் - முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும் இருப்பது போன்ற ஓவியத்தை வரைந்து அனுப்பி இருந்தார்.