தமிழ்நாடு

மக்களின் கவலைகளைப் போக்கும் அரசாக விளங்கும் ‘திராவிட மாடல்' ஆட்சி.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

பேரறிஞர் அண்ணா மனசாட்சியையும் நாட்டு மக்களையும் தாண்டிநாம் அஞ்சுகின்ற பொருள் வேறு இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மக்களின் கவலைகளைப் போக்கும் அரசாக விளங்கும் ‘திராவிட மாடல்' ஆட்சி.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள்,நேற்று (08-07-2022) இரவு திருவண்ணாமலையில் பேரறிஞர் அண்ணா நுழைவுவாயில் மற்றும் முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவச் சிலையினைத் திறந்து வைத்து உரையாற்றினார். விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

பொதுவாக, திருவண்ணாமலைக்கு வருபவர்கள் கிரிவலப்பாதையைச் சுற்றி வருவார்கள். ஆனால், இன்று நான் திருவண்ணாமலையையே சுற்றிவரும் சூழ்நிலையை நம்முடைய எ.வ.வேலு அவர்கள் உருவாக்கி வைத்திருக்கிறார். திருவண்ணாமலை உச்சியில்தான் பொதுவாக தீபம் ஒளிரும். ஆனால், இன்றைய தினம் திருவண்ணாமலை நகரம் முழுவதும் ஒளிமயமாகக் காட்சியளிக்கும் வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாபெரும் கூட்டம் இங்கு எழுச்சியோடு - ஏற்றத்தோடு மாநாடுபோல் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. கடந்த வாரத்தில் திருப்பத்தூர், கரூர் மாவட்டத்தில் நான் மக்கள் கடலைப் பார்த் தேன். அதனை எல்லாம் தாண்டி இன்றைக்கு திருவண்ணாமலை கூட்டம், அது கலைநிகழ்ச்சிகளாக இருந்தாலும், மக்களுடைய எழுச்சியாக இருந்தாலும் என்னையே திக்குமுக்காட வைத்திருக்கிறார் நம்முடைய வேலு அவர்கள்.

கழகத்தின் விழா வேந்தன் என்றால் அதுவேலுதான். அவரை பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சராக இருந்து பணியாற்றுங்கள் என்று சொன்னாலும் - கழகத்தைப் பொறுத்தவரையில் அவரிடம் பல்வேறு துறைகள் இருக்கிறது. சிலைகள் துறை - மணிமண்டபங்கள் துறை - விழாக்கள் துறை- சிறப்பு மலர்கள்தயாரிப்புத் துறை - புத்தகங்கள் அச்சிடும் துறை - நினைவுப் பரிசுகள் தயாரிப்புத் துறை - என எத்தனையோ துறையை வைத்துச் செயல்பட்டுக் கொண்டிருப்பவர் வேலு.

மக்களின் கவலைகளைப் போக்கும் அரசாக விளங்கும் ‘திராவிட மாடல்' ஆட்சி.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

எ.வ.வேலு என்றால் 'எதிலும் வல்லவர்' என்று நான் சொல்வது, ஏதோ புகழவேண்டும், பாராட்ட வேண்டும் என்பதற்காக அல்ல! அவரது இயல்பே அப்படித்தான்! அவரிடம் ஒரு செயலைக் கொடுத்தால், அதன் பிறகு அதைப் பற்றி நாம் கவலையே பட வேண்டாம். சொன்ன நாளுக்கு மேடைக்கு வந்தால் போதும். அந்தளவுக்கு சுத்தமாக - கனகச்சிதமாக - அதை முடித்துக் காட்டுபவர்தான் வேலு அவர்கள். இந்த ஆற்றல் எல்லாருக்கும் வாய்க்காது. ஆற்றல் வாய்ந்தவர்கள் கூட - அதே ஆர்வத்தோடு வேலை பார்ப்பார்கள் என்றும் சொல்ல முடியாது. ஆற்றலும் ஆர்வமும் கொண்ட அவரால் - அவரது முயற்சியால்தான் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில், பல்வேறு மாவட்டங்களில் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களின் சிலைகள் அமைக் கப்பட்டிருக்கின்றன! கம்பீரமாக இன்று அவைகள் எல்லாம் காட்சியளித்துக் கொண் டிருக்கிறது.

ஊரெல்லாம் திறந்து வைத்துவிட்டு - இப்போது தன்னுடைய ஊரில் - திருவண் ணாமலையில் தமிழினத் தலைவர் கலைஞரின் சிலையை உருவாக்கி - என்னை அழைத்து வந்திருக்கிறார் வேலு அவர்கள். அதனால் அவருக்கு நான் முதலில் இதயப் பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அவருக்கு நன்றி சொல்வது - எனக்கு நானே நன்றி சொல்லிக்கொள்வதற்கு சமம்தான் என்றாலும், வெளிப்படையாகப் பாராட்ட வேண்டியது என்னுடைய கடமை என்ற அடிப்படையில், நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல், அவருடன் தோளோடு தோள் நின்று பணியாற்றும் - இன்றைக்கு துணை சபாநாயகராகப் பொறுப்பேற்றிருக்கும் நம்முடைய பிச்சாண்டி அவர்கள், நான் இளைஞரணிச் செயலாளராக இருந்தபோது, இந்தமாவட்டத்தில் இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்து, மாவட்ட அமைப்பாளராகஉயர்வு பெற்று, அதற்குப்பிறகு மாவட்டச் செயலாளராகவும் பொறுப்பேற்று, தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் அமைந்த அமைச்சரவையில் அமைச்சராகவும் பொறுப்பேற்று, இன்றைக்கு உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் உங்களில் ஒருவனாகஇருக்கும் என்னுடைய தலைமையில் அமைந்திருக்கும் இந்த ஆட்சியில் சட்டப்பேரவையின் துணைத் தலைவராக இருந்து பணியாற்றிக்

கொண்ருக்கும் பிச்சாண்டி அவர்கள் மற்றும்நம்முடைய கழகத்தின் முன்னோடிகள் - நிர்வாகிகள் - சட்டமன்ற உறுப்பினர்கள் - நாடாளுமன்ற உறுப்பினர்கள் - ஒன்றியக் கழக - நகரக் கழக - வட்ட - பேரூர்க் கழக - கிளைக் கழக நிர்வாகிகள் - உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் - யார் யார் தங்களுடைய உழைப்பை இதற்கு அளித் திருக்கிறார்களோ அவர்கள் அத்தனை பேருக்கும் நான்தலைமைக் கழகத்தின் சார்பில் என்னுடையநன்றியைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.

எல்லாவற்றுக்கும் மேலாக, தலைவர் கலைஞரின் சிலை கம்பீரமாய் அமையக் காரணமாக இருந்த ஒவ்வொரு தொண்டருக்கும் - ஒவ்வொரு உடன்பிறப்புக்கும் - உங்களில் ஒருவன் என்ற முறையில் மகிழ்ச்சியோடு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பேரறிஞர் அண்ணா அவர்கள் பெயரால் அமைந்துள்ள நுழைவு வாயில் வளைவு இன்றைக்கு கம்பீரமாக திறக்கப்பட்டுள்ளது.

தாழ்ந்த நிலையில் இருந்த தமிழினத்தை சுயமரியாதை உணர்வை ஊட்டித் தலைநிமிரவைத்த தமிழ்நாட்டின் தலைமகன்தான் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள். ஈராயிரம் ஆண்டுகள் அன்னைத் தமிழகம் தவமிருந்து பெற்றெடுத்த தலைமகன். ‘சிங்கநடையும் சிங்காரத் தெள்ளு நடையும் பொங்கு கடல்நடையும் புரட்சிக் கவிநடையும் தன்னு டய உரைநடையால் கண்ட கோமான் -தம்பிமார் படைமீது விழியொற்றி வெற்றி கண்டிருக்கும் பூமான். பூமிப்பந்தில் தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களோ, அங்கெல்லாம் - அவருடைய இதயம் எல்லாம் தங்க சிம்மாசனம் போட்டு வீற்றிருக்கும் நம்முடைய இதய மன்னன். நம்மைஆளாக்கிய அண்ணன். அதன் அடையாள மாகத்தான் அவரது பெயரால் இந்த வளைவு அமைக்கப்பட்டிருக்கிறது. அப்படி நிமிர்ந்துநின்ற தமிழினத்தை - தனது தொலை நோக்குப் பார்வையால் தீட்டிய திட்டங்களின் துணைகொண்டு உயர்த்தியவர் யார்? நம்முடைய உள்ளத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள்.

அதனால்தான் கலைஞர் அவர்கள் சிலை வானத்தை நோக்கிக் கை உயர்த்தியபடி கம்பீரமாக அவர் நின்று கொண்டிருக்கிறார். பேரறிஞர் அண்ணா அவர்களும் - முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும் திருவண் ணாமலையில் உயர்ந்து நிற்கிறார்கள் என்றால், தமிழினம் உயர்ந்திருக்கிறது - தமிழ் நாடு அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி பெற்றிருக்கிறது - முற்போக்குச் சிந்தனை கொண்டு தமிழர்கள் முன்னேற்றம் அடைந்த சமுதாயமாக விளங்குகிறார்கள்என்று பொருள்! திருவண்ணாமலையையும் தி.மு.கழகத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது! திருவண்ணாமலையையும் தீபத்தையும் எப்படி பிரித்துப் பார்க்க முடியாதோ - அது போல, திருவண்ணாமலையையும் திராவிட முன்னேற்றக் கழகத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது. கழகம் உருவான அன்று நடந்தமுதல் பொதுக்கூட்டத்தில் 1,451 ரூபாய் வசூலானது. அதில் 100 ரூபாய் திருவண்ணாமலையைச் சேர்ந்த நம்முடைய அன்புக்குரிய ப.உ.சண்முகம் அவர்கள் வழங்கியது. கழகம் முதன்முதலாகத் தேர்தலில் போட்டியிட்ட 1957 தேர்தலில் 15 பேர் சட்டமன்றத்துக்கு வெற்றி பெற்றார்கள். அதில் 3 பேர் இந்த மாவட்டத்தில் இருந்து வெற்றி பெற்று வந்தவர்கள் தான். ப.உ.சண்முகம், பி.எஸ்.சந்தானம், களம்பூர் அண்ணாமலை ஆகிய மூவரும் வென்றார்கள். கழகம் போட்டியிட்ட முதல் நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டு தொகுதிகளை வென்றோம். அதில் ஒன்று திரு வண்ணாமலை தொகுதி! இரா.தர்மலிங்கம் அவர்கள் வென்றார்.

அந்தளவுக்குக் கழகத்துக்கு அமைப்புரீதியாகவும் - சட்டமன்றத்தி லும் - நாடாளுமன்றத்திலும் கால்கோள் நாட்ட அடித்தளமாக அமைந்த ஊர் தான் திருவண்ணாமலை! அதனால் பேரறிஞர் அண்ணா நுழைவு வாயிலும், தமிழினத் தலைவர் கலைஞரின் திருவுருவச் சிலையையும் அமைக்க மிகவும் பொருத்தமான ஊர் இந்தத் திருவண்ணாமலை! 1957-ஆம் ஆண்டு தேர்தல் வெற்றிக்குப் பிறகு வட ஆர்க்காடு மாவட்ட மாநாட்டை எங்கு நடத்தலாம் என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் சிந்தித்தபோது, திருவண்ணாமலையில் தான் நடத்தினார்.

அப்போது திருவண்ணாமலை என்பது ஒருங்கிணைந்த வட ஆர்க்காடு மாவட்டத்தில்தான் இருந்தது. அப்போது இந்தி ஆதிக்கம் தலைவிரித்து ஆடிய காலம் என்பதால், முதல் நாளில் இந்தி எதிர்ப்பு மாநாடாகவும் - இரண்டாவது நாளில் தி.மு.க மாநாடாகவும் அதனைப் பேரறிஞர் அண்ணா அவர்கள் நடத்தினார். 1957-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21, 22 ஆகிய இரண்டு நாட்களும் மாநாடு நடந்தது. இந்திஎதிர்ப்பு மாநாட்டுக்குத் தலைமை வகித்தவர் துறவி அருணகிரிஅடிகள் அவர்கள். “வீட்டைத்தான் துறந்துசென்றேன். என் தாய்நாட்டை - என் மொழியை - என்னுடைய இனத்தைத் துறந்து சென்றுவிடவில்லை. என்னுடைய இனம் தானே இன்றைக்கு எனக்குச் சோறு போடு கிறது?'' என்று கேட்டார் மாநாட்டுத் தலைவர் துறவி அருணகிரி அடிகள் அவர்கள். இந்த இந்தி எதிர்ப்பு மாநாட்டைத்தான், உலக ஜனநாயகவாதிகளுக்கு உற்சாக மூட்டும் அமெரிக்க சுதந்திரப் பிரகடனத் தோடும் - ஒடுக்கப்பட்ட பாட்டாளி மக்களுக்கு எழுச்சியூட்டும் லெனின் பிரகடனத்தோடும் ஒப்பிட்டார் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். இரண்டாவது நாள் மாநாட்டுக்குத் தலைமை வகித்தவர் அன்பிலார் என்று பாசத்தோடு அழைக்கப்பட்ட அன்பில்தர்மலிங்கம் அவர்கள். இந்த மாநாட்டில் பேரறிஞர் அண்ணா அவர்கள் பேசிய பேச்சுதான் - இந்தி ஆதிக்கத்தை எதிர்க்க வேண்டும் என்பதையும் - அதற்கு எத்தகைய தியாகம் செய்ய வேண்டும் என்பதையும் தமிழ்நாட்டுக்கு உணர்த்தியது என்று நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் சொன்னார்.

அந்த வகையில் தமிழ்மொழியைக்காக்கவும் - இந்தி ஆதிக்கத்தை எதிர்க்கவும் தமிழ்நாட்டு மக்களுக்கே வழிகாட்டிய திருவண்ணாமலையில் பேரறிஞர் அண்ணா அவர்களுக்கும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கும் சிறப்பு செய்யப்படுவது மிகமிக பொருத்தமான ஒன்று என்று நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்! 1963-ஆம் ஆண்டு திருவண்ணாமலை யில் இடைத்தேர்தல். திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி வேட்பாளராக ப.உ.சண்முகம் அவர்கள் போட்டியிடுறார். ஆளும் கட்சியாக காங்கிரசு ஆட்சி செய்த காலம் அது. கழகத்தை வெற்றிபெற வைக்க யாரை அனுப்பலாம் என்று முடிவு செய்த பேரறிஞர் அண்ணா அவர்கள், நம்முடைய ‘தமிழினத் தலைவா கலைஞர்’ அவர்களைத்தா தேர்தல் பொறுப்பாளராகத் திருவண்ணாமலைக்கு அனுப்பி வைத்தார்.

இரவு பகல் பார்க்காமல் கலைஞரும், திருவண்ணாமலையைச் சேர்ந்த கழக முன்னணியினரும் உழைத்த உழைப்பால் - அந்தத் தேர்தலில் கழகம் வென்றது! மலையையே கைப்பற்றிய மகிழ்ச்சியில் தலைவர் கலைஞர் அவர்கள் மயிலாடுதுறை சென்று - அங்கு தங்கியிருந்த பேரறிஞர் அண்ணா அவர்களைக் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வெற்றியைச் சொல்கிறார். இருவரும் ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கிக் கொள்கிறார்கள்.

அந்தத் திருவண்ணாமலை இடைத்தேர்தல் வெற்றிதான் - பொதுத்தேர்தல் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தது என்று தலைவர் கலைஞர் அவர்களே பலமுறை எழுதி இருக்கிறார். திருவண்ணாமலை இடைத்தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக - தமிழ் நாட்டின் பல ஊர்களில் இருந்தும் நம்முடைய கழகத் தொண்டர்கள் வந்து இங்கு பணியாற்றினார்கள். தேர்தல் வெற்றிக்குப் பிறகு திருவண்ணாமலை வெற்றி விழாப் பொதுக்கூட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் நடந்தன. திருவண்ணாமலையிலும் நடந்தது.

திருவண்ணாமலை இடைத் தேர்தல்தான் - அடுத்த பொதுத் தேர்தலில் நாம் எப்படி செயல்பட வேண்டும் என்று தனக்குக் கற்பித் ததாகவும் கலைஞர் அவர்கள் சொல்லி இருக்கிறார். சாதாரண மாக ஒரு தேர்தலில் வெற்றி பெற முடியாது. அதுவும் இடைத்தேர்தலில் எதிர்க்கட்சியாக இருந்து வெற்றி பெறுவது என்பது இயலாத காரியம். உணவை மறந்து, உயிரைக் கொடுத்து உழைப்பதற்கான தொண்டர்களை ஊருக்கு ஊர் உருவாக்கினோம். தேர்தல் பணிகளுக்காகப் பிரச்சாரப் பணிகளுக்காக நிதி வேண்டும் என்று தலைவர் கலைஞர் அவர்கள் முடிவெடுக்கிறார். 7.7.1963 அன்று சென்னை கடற்கரையில் ‘திருவண்ணாமலை வெற்றிவிழாப் பொதுக் கூட்டம்’ நடந்தது. மேடையில் பேரறிஞர் அண்ணா உள்ளிட்ட தலைவர்கள் அனைவரும் இருக்கிறார்கள். 'சட்டமன்றப் பொதுத் தேர்தல் வரப்போகிறது. அதற்கு நாம் தயாராக வேண்டும் என்பதையே திருவண்ணாமலை இடைத் தேர்தல் நமக்கு உணர்த்துகிறது. தேர்தல் பணிகளுக்காகப் பத்து லட்சம் ரூபாயாவது நமக்கு தேவை.

மக்களின் கவலைகளைப் போக்கும் அரசாக விளங்கும் ‘திராவிட மாடல்' ஆட்சி.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

கழகப் பொருளாளர் என்ற முறையில் எனது நிதி திரட்டுதலை இங்கிருந்து இன்றே தொடங்குகிறேன்' என்று கலைஞர் அவர்கள் அறிவித்தார். 60 ஆண்டுகளுக்கு முன்னால் பத்து லட்சம் ரூபாய் என்பது பல கோடி ரூபாய் மதிப்பிலானது. பேரறிஞர் அண்ணா உள்ளிட்ட அனைவருமே அதிர்ச்சி அடைந்தார்கள். பத்து லட்சம் ரூபாயை நம்மால் சேர்க்கமுடியுமா என்று பேரறிஞர் அண்ணா - நாவலர்- ப.உ.ச. உள்ளிட்ட எல்லா தலைவர்களும் கலைஞரிடம் கேட்டார்கள். “முடியும்” என்று சொன்னார் கலைஞர்.

இறுதியில், பத்து லட்சம் அல்ல, பதினோருலட்சம் ரூபாயைத் திரட்டி அண்ணாவிடத்தில் கொடுத்தார் கலைஞர் அவர்கள். சைதாப் பேட்டை வேட்பாளர் - திருவாளர் பதினோருலட்சம் என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் அழைத்தார். முதன்முதலாகக் கழகம் ஆட்சியைக்கைப்பற்றக்களம் அமைத்து,வெற்றிச் சூத்தி ரத்தைக் கற்பித்த ஊர் இந்தத் திருவண்ணாமலை என்பதை நான் பெருமகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். இங்கே பேரறிஞர் அண்ணாவுக் கும் கலைஞருக்கும் சிறப்பு செய்யப்படுவது மிகமிக பொருத்தமானது! சட்ட மன்றத் தேர்தலுக்கு முன்னால் -‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பயணத்தை நான் திருவண்ணாமலையில் இருந்துதான் தொடங்கினேன். தொகுதி தொகுதியாகச் சென்று தமிழ்நாட்டு மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றேன். “உங்கள் கவலைகளை - உங்களதுகோரிக்கைகளை- உங்களது எதிர்பார்ப்புகளை - என்னிடம் நீங்கள் ஒப்படைத்துள்ளீர்கள்.

இனி இவை என்னுடைய கவலைகள், என்னுடைய கோரிக்கைகள், என்னுடைய எதிர்பார்ப்புகள். இவற்றுக்குத் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்ததும் 100 நாட்களில் தீர்வு காண்பேன்” என்று சொன்னேன். ஸ்டாலினிடம் மனுவைக் கொடுத்தால் அது நிச்சயம் நிறைவேறும் என்ற நம்பிக்கையோடு, கோரிக்கை மனுக்களை லட்சக்கணக்கான மக்கள் கொடுத்தார்கள். கழகம் வெற்றி வாகை சூடுவதற்கு அடித்தளம் அமைத்தது ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற எனது சுற்றுப்பயணம் என்றால், தமிழகம் முழுவதும் வெற்றித் தீபத்தை திராவிட முன்னேற்றக் கழகம் பெறுவதற்கு அடித்தளம் அமைத் தது திருவண்ணாமலையின் தொடக்கம்தான் என்பதை நான் மகிழ்ச்சியோடுதெரிவித்துக் கொள்கிறேன். அத்தகைய திருவண்ணாமலையில் பேரறிஞர் அண்ணாவுக்கும், தலைவர் கலைஞருக்கும் சிறப்புச்செய்வது மிகமிகப் பொருத்தமானது.

“மக்களின் அரசாக - மக்கள் நல அரசாக - மக்கள் விரும்பும் அரசாக - மக்கள் கவலைகளைப் போக்கும் அரசாக - மக்கள் கனவுகளை நிறைவேற்றும் அரசாக திராவிட முன்னேற்றக் கழக அரசு அமையும்! இந்த அரங்கத்துக்குள் வரும்போது நீங்கள் கொண்டுவந்த பாரங்களை, இப்போது என் முதுகில் ஏற்றி விட்டீர்கள். என்னை நம்பி ஏற்றி வைத்திருக்கிறீர்கள். நீங்கள் நம்பிக்கையுடன் செல்லுங்கள்! திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிதான் அமையும் என்ற நம்பிக்கையுடன் நீங்கள் இந்தக் கோரிக்கையை வைத்துள்ள உங்களுக்கு நான் சொல்வது, ஆமாம்! கழகஆட்சி தான் அமையும்! உங்கள் கவலைகள் யாவும் தீரும்!” - என்று திருவண்ணாமலையில் வைத்துத் தமிழ்நாட்டுமக்களுக்குச் சொன்னேன்.

இந்த ஓராண்டுகாலத்தில் மக்களின் அரசாக, மக்கள் நல அரசாக, மக்கள் விரும்பும் அரசாக, மக்களின் கவலைகளைப் போக்கும் அரசாக, இன்னும் பெருமையாக சொல்ல வேண்டும் என்றால் ‘திராவிட மாடல் அரசை' இன்றைக்கு நான் நடத்தி வருகிறேன். அதுமட்டுமல்ல, தலைவர் கலைஞர் தமிழைப்பற்றி அடிக்கடி பெருமையோடு சொல்லுவார். நானும் பல இடங்களில் சொல்லியிருக்கிறேன். உளங்கவர் ஓவியமே, உற்சாகக் காவியமே, ஓடை நறுமலரே, ஒளியுமிழ்ப் புதுநிலவே, அன்பே, அமுதே, அழகே, உயிரே, இன்பமே, இனிய தென்றலே, பனியே, கனியே, பழரசச்சுவையே, மரகத மணியே, மாணிக்கச் சுடரே, மன்பதை விளக்கே என்றெல்லாம் தமிழை அழைக்கத் தோன்றுகிறது. இருந்தாலும் தமிழே என்றழைக்கும் சுகம் வேறு எதிலும் கிடையாது. அப்படிப்பட்ட தமிழை வளர்க்கும் -போற்றும் அரசாக, தமிழினத்தைக் காக்கும் அரசாக - இந்தத் தமிழக அரசை இன்றைக்கு நாம் நடத்தி வருகிறோம்.

பேரறிஞர் அண்ணாவின் ஆசைகளை -தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் கனவுகளை நிறைவேற்றி விட்டு நான் இந்தத் திருவண்ணாமலைக்கு நெஞ்சை நிமிர்த்தி வந்திருக்கிறேன். நான் இங்கு கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறேன். நான் எனது கடமையைச் செய்து வருகிறேன் - சரியாகச் செய்து வருகிறேன் என்பதைச் சொல்வதற்காக வந்திருக்கிறேன். பேரறிஞர் அண்ணா அவர்கள் வரவேற்பு நுழைவு வாயிலாக காணப்படுகிறார்! தலைவர் கலைஞர் அவர்கள் சிலையாக எழுந்து நிற் கிறார்! உலகத்திலேயே கொடுத்து வைத்தவர் என்றால் பேரறிஞர் அண்ணா அவர்களாகத்தான் இருக்கமுடியும். அவரே சொல்லி இருக்கிறார். “தந்தை பெரியாரைப் போல ஓர் ஆசிரியரும் - தலைவர் கலைஞரைப் போல ஒரு மாணவனும் வேறு யாருக்கும் கிடைக்க மாட்டார்கள். எனக்குக் கிடைத்தார்கள்.” அத்தகைய மாமேதை அண்ணா அவர்கள் ஒரு முறை குறிப்பிட்டதை, இந்த விழாவின் மூலமாகத் தமிழ்நாட்டில் இருக்கும் கோடிக்கணக்கான திராவிட முன்னேற்றக் கழகத்தின் உடன்பிறப்புகளுக்கும் நான் நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளேன். “கழகம் இன்று இவ்வளவு வளர்ந்திருக்கிறது என்றால் அதற்கு கலைஞர் கருணாநிதியின் தொண்டும் முக்கியமான காரணமாகும். அவரது தொண்டில் மறக்க முடியாதது திருவண்ணாமலை இடைத்தேர்தலில் வெற்றி பெற்றது மட்டுமல்ல, சென்னை மாநகராட்சியைக்கைப்பற்றியது மட்டுமல்ல, புதுச்சேரியில் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கப்பட்ட சம்பவம்தான்மறக்க முடியாதது. அவரைப்பாராட்டுகிறேன் என்றால் எடுத்தகாரியத்தை எல்லாம் சிறப்பாகசெய்து முடிப்பதால்தான். அவரின்சிறப்புகளை எல்லாம் கழகத் தோழர்கள் அனைவரும் பெற வேண்டும்”என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் பாராட்டினார்கள். அதைத்தான்நான் நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளேன்.

பேரறிஞர் அண்ணாவைப் போற்றுகிறோம் - முத்தமிழறிஞர்கலைஞரைப் போற்றுகிறோம் -என்றால் அது ஏதோ விழாவாக -அவர்களைச் சிறப்புச் செய்வதாகமட்டுமே முடிந்துவிடக் கூடாது.அவர்களைப் போன்ற ஆற்றலை நாம் பெற்றாக வேண்டும். அவர்களைப் போல செயல்களைச் செய்தாக வேண்டும். அவர்களைப் போல உழைத்தாக வேண்டும். உங்களது ஆற்றலும் செயலும் உழைப்பும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் அதன் மூலமாக இந்த தமிழ் நாட்டுக்கும் பயன்பட வேண்டும்.

கடந்த அரைநூற்றாண்டு காலமாக, திராவிட முன்னேற்றக் கழகம் உழைத்தஉழைப்பால், தீட்டிய திட்டங்களால் தமிழ்நாடு மேன்மை அடைந்தது. கழகத்தின் வளர்ச்சியில்தான் தமிழ்நாட்டின் வளர்ச்சி அடங்கியிருக்கிறது! தமிழ்மொழிக்கும் இனத்துக்கும் தமிழ் நாட்டுக்கும் காவல் அரண் கழகம்தான். இங்கே திறக்கப்பட்டு இருப்பது கலைஞரின் சிலை அல்ல, கலைஞர் என்னும் கொள்கை மலை. அந்தச் சிந்தனையுடன் ஒவ்வொருவரும் பெரியாராக, அண்ணாவாக,கலைஞராக, பேராசிரியராக கழகத்துக்கும் நாட்டுக்கும் உழைக்க வேண்டும்! சில நாட்களுக்கு முன் நாமக் கல்லில் நடைபெற்ற உள்ளாட்சி யிலும் நல்லாட்சி மாநாட்டில்கூட “அண்ணன் காட்டிய பாதைதான், நமது பாதை!” என்று உடன்பிறப்பு களான உங்களுக்குச் சொன்னேன். நான் முன்னே சொன்ன, இந்தத் திருவண்ணாமலையில் நடைபெற்ற 1957-ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு மாநாட்டில், “எங்களுக்கு இந்தஉலகத்தில் இரண்டு எஜமானர் கள்தாம் உண்டு. ஒன்று எங்கள் மனசாட்சி. மற்றது இந்த நாட்டு மக்கள்” என்றார் பேரறிஞர்அண்ணா. மனசாட்சியையும் நாட்டு மக்களையும் தாண்டி நாம் அஞ்சுகின்ற பொருள் வேறு இல்லை என்ற வகையில்தான் நாமும் செயல்பட்டு வருகிறோம்; நமது அரசும் செயல்பட்டு வருகிறது.

எனவே மீண்டும் சொல்லு கிறோம், எந்த நம்பிக்கையோடு திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி உருவாக வேண்டும் என்ற எண்ணத்தோடு நீங்கள் ஆதரவு தந்தீர்களோ - வாக்களித்தீர்களோ தமிழ்நாட்டு மக்கள் அதை எண்ணி நம்பி வாக்களித்தார்களோஅந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக என்றைக் கும் இருப்போம் என்று அண்ணா மீது ஆணையாக - கலைஞர் மீது ஆணையாக ஆணையிட்டுச் சொல்லி விடைபெறுகிறேன்.

இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories