தமிழ்நாடு

ஜெயக்குமார்னு சொல்லாதீங்க.. நான் வேற பேரு வைச்சிருக்கேன் : துரோக வரலாற்றை சொன்ன முன்னாள் அதிமுக நிர்வாகி!

ஜெயக்குமார்தான் துரோகி என முன்னாள் அ.தி.மு.க நிர்வாகி புகழேந்தி தெரிவித்துள்ளார்.

ஜெயக்குமார்னு சொல்லாதீங்க.. நான் வேற பேரு வைச்சிருக்கேன் : துரோக வரலாற்றை சொன்ன முன்னாள் அதிமுக நிர்வாகி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அ.தி.மு.க-வில் பொதுச்செயலாளர் பதவிக்கு பதிலாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை பதவி உருவாக்கப்பட்டது.‌தொடர்ந்து ஒருங்கிணைப்பாளராக, ஓ.பன்னீரீசெல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் பதவி வகித்து வருகின்றனர்.

ஜெயக்குமார்னு சொல்லாதீங்க.. நான் வேற பேரு வைச்சிருக்கேன் : துரோக வரலாற்றை சொன்ன முன்னாள் அதிமுக நிர்வாகி!

இந்நிலையில், அ.தி.மு.க.விற்குள் ஒற்றைத் தலைமை குரல் எழுந்துள்ளது. இதனால் ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் அண்மையில் நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழுவில் கொண்டுவந்த தீர்மானத்தை பொதுக்குழுவே நிராகரித்த சம்பவம் அரங்கறியது.

இதையடுத்து அ.தி.மு.க கட்சிக்கு ஓ.பன்னீர்செல்வம் துரோகம் இழத்துவிட்டதாக எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக அ.தி.மு.க நிர்வாகிகளான ஜெயக்குமார், உதயகுமார் ஆகியோர் தொடர்ந்து பேசி வருகின்றனர்

ஜெயக்குமார்னு சொல்லாதீங்க.. நான் வேற பேரு வைச்சிருக்கேன் : துரோக வரலாற்றை சொன்ன முன்னாள் அதிமுக நிர்வாகி!

இந்நிலையில் ஜெயகுமார்தான் அ.தி.மு.கவுக்கு துரோகம் செய்துள்ளார் என முன்னாள் அ.தி.மு.க நிர்வாகி புகழேந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "அ.தி.மு.க கட்சி தற்போது சி.வி. சண்முகத்தின் பின்னால் சென்றுவிட்டது.

எடப்பாடி பழனிசாமி ஒன்றும் தலைவர் அல்ல. அவரே சி.வி. சண்முகம் சொல்வதைதான் கேட்கிறார். கட்சி கூட்டம் என்ற பெயரில் அ.தி.மு.க தலைவர்கள் விளையாடி வருகின்றனர்.

ஜெயக்குமார்னு சொல்லாதீங்க.. நான் வேற பேரு வைச்சிருக்கேன் : துரோக வரலாற்றை சொன்ன முன்னாள் அதிமுக நிர்வாகி!

ஜெயக்குமாரை எல்லாம் பெயரை சொல்லி கூப்பிடகூடாது. அவருக்கு வேறு ஒரு பெயர் உள்ளது. அது புறாத்தலையன். இப்படிதான் ஜெயக்குமாரை பெயர் சொல்லி கூப்பிடனும். ஓ.பன்னீர்செல்வம் துரோகம் செய்துவிட்டதாக கூறுகிறார். ஆனால் அவருக்கு எப்படி அமைச்சர் பதவி கிடைத்தது என்று தெரியுமா?

அ.தி.மு.க அமைச்சர் பட்டியலில் ஜெயக்குமார் பெயர் இல்லை. இது தெரிந்த உடன் தலைமை செயலகத்திற்கு வந்து முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து, 'பட்டியலில் என் பெயர் இல்லையே' என கேட்டார். அப்போது நான் பார்த்துக்கொள்கிறேன் என ஜெயலலிதா கூறினார். அப்போது நானும் உடன்தான் இருந்தேன்.

ஜெயக்குமார்னு சொல்லாதீங்க.. நான் வேற பேரு வைச்சிருக்கேன் : துரோக வரலாற்றை சொன்ன முன்னாள் அதிமுக நிர்வாகி!

இந்த சம்பவத்திற்கு பிறகுதான் அவருக்கு சட்டப்பேரவை சபாநாயகர் பதவி கிடைத்தது. இதையடுத்து ஜெயலலிதாவிற்கு எதிராக செயல்பட்டதால்தான் அவரின் சபாநாயகர் பதவி பறிக்கப்பட்டது. தற்போது மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்கவில்லை என்பதால் இரண்டு பக்கமும் சண்டையை மூடடிவிட்டு அ.தி.மு.க-வை உடைக்கப்பார்க்கிறார். இப்ப தெரிகிறதா யார் துரோகி என்று.

ஆரம்பத்தில் இருந்தே புறாத் தலையன் ஜெயக்குமார்தான் துரோகி. இந்த துரோகிதான் மற்றவர்களைப் பார்த்து துரோகி என்கிறார். இப்படியே பேசி கொண்டிருந்தால் ஜெயக்குமார் பற்றி இன்னும் பல செய்திகள் வெளியே வரும்" என கடுமையாக விமர்சித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories