சமூக வலைதளங்களில் ஆளூர்ஷா நவாஸ் வாதத்தின் ஒரு பகுதி வைரலாகி வருகிறது. அது வருமாறு:- ``இந்து மக்களுக்கு எதிரானது திராவிட இயக்கம்,’’ என்று ஒருவர் சொன்னார். நான் உடனே கேட்டேன், “ஏன்ப்பா தமிழ் நாட்டில் 69 சதவிகித இட ஒதுக்கீடு இருக்கே தெரியுமா?” என்று கேட்டேன். “ஆமாம், தெரியுமே” என்றார்.
“அதில் வந்து கிறித்துவர்களுக்கு இட ஒதுக்கீடு உண்டா. ? இல்லை. ஏன்னா, கிறித்துவர்களுக்கு கலைஞர் இட ஒதுக்கீடு கொடுத்தார். அவங்க வேண்டாம் என்று சொல்லி திருப்பி கொடுத்து விட்டார்கள். நீங்க கொடுத்து இருக்கிற இட ஒதுக்கீட்டிலே நாங்க நல்லா இருக்கோம். ஆகவே எங்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டாம் என்று சொல்லி திருப்பிக் கொடுத்துட்டாங்க.
இஸ்லாமியர்கள் வாங்கிக் கொண்டார்கள். 3.5 விழுக்காடு உள் இடஒதுக்கீட்டை 2007 ல் கலைஞர் சட்டம் ஆக்கினார். மத ரீதியாக பார்த்தீர்களேயானால் இந்த 69 சதவிகித இட ஒதுக்கீட்டில் இஸ்லாமி யர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கின்ற 3.5 விழுக்காட்டைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் 69 விழுக்காட்டை பெரும்பான்மையாக அனுபவிப்பது யார் ? இந்து.
இப்போ இந்து படிக்கப் போகணும், இந்து வேலைக்குப் போகணும், இந்து அதிகாரத்துக்கு வரணும் என்பதற்காகப் போராடி அதனை சட்டமாக்கி, அந்தச் சட்டத்துக்கு எந்த இடையூறும் வராமல் இன்னும் காப்பரணாக இருக்கின்ற இயக்கம் திராவிட இயக்கம்.
இந்த 69 விழுக்காடு இட ஒதுக்கீடு வரணும்ன்னு இந்த ஆர்.எஸ்.எஸ். எங்கேயாவது போராடியதா? இந்த 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்கு எந்தப் பங்கமும் வந்துவிடக் கூடாது என்று பி.ஜே.பி. காரர்கள் யாராவது நீதிமன்றத்திற்குப் போய் நிற்கிறாங்களா? இங்கே இந்துவுக்கு ஆதரவானவங்க பெரியாரா? நீங்களா? சொல்லுங்க ?
இந்து படிக்கக் கூடாது என்று நீங்க சொல்றீங்க, இந்து படிக்கணும்ன்னு பெரியார் சொல்றார். இந்து வேலைக்குப் போகக் கூடாது என்று நீங்க சொல்றீங்க, இந்து வேலைக்குப் போகணும்ன்னு பெரியார் சொல்றார்.
கோயில்லே கூட “நாங்க மட்டும் தான் அர்ச்சகராக இருப்போம்”ன்னு நீங்க சொல்றீங்க, ஆனா “எல்லா இந்துவும் அர்ச்சகராகணும்”ன்னு பெரியார் சொல்றார். அப்போ இந்து மக்களின் தலைவர் பெரியார். இந்து மக்களின் தலைவர் கட்டாயமாக எச். ராஜா இல்லை. ஆர்.எஸ்.எஸ். இல்லை. இந்து மக்களின் கட்சி; திராவிட முன்னேற்றக் கழகம் என்று அடிச்சுச் சொல்லுங்க.” இவ்வாறு ஆளூர் ஷா நவாஸ் எம்.எல்.ஏ. பேசினார்