தமிழ்நாடு

கடந்த ஆண்டு 3-வது இடம்.. பா.ஜ.க ஆளும் மாநிலங்களை பின்னுக்கு தள்ளி, உணவு பாதுகாப்பில் தமிழ்நாடு முதலிடம் !

உணவு பாதுகாப்பு குறியீட்டில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.

கடந்த ஆண்டு 3-வது இடம்.. பா.ஜ.க ஆளும் மாநிலங்களை பின்னுக்கு தள்ளி, உணவு பாதுகாப்பில் தமிழ்நாடு முதலிடம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் தி.மு.க அரசு ஆட்சி அமைத்த இந்த ஓராண்டில் பல்வேறு துறைகளில், பா.ஜ.க ஆளும் மாநிலங்களைக் காட்டிலும் சிறப்பாகச் செயல்பட்டு வருவதாக ஊடகங்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் பல்வேறுதுறைகளிலும் தமிழ்நாடு முதலிடம் பெற்றுவருகிறது.

இந்நிலையில் 2021-22-ம் ஆண்டிற்கான உணவு பாதுகாப்பு குறியீட்டில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவில் பாதுகாப்பான உணவை உறுதி செய்யும் மாநிலங்கள் பட்டியலை ஆண்டுதோறும் உணவுப்பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயம் ஆணையம் நேற்று வெளியிட்டது.

இந்த பட்டியலில்தான் பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களை முந்தி தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. குஜராத் மாநிலம் இரண்டாவது இடத்தையும், மகாராஷ்டிரா மாநிலம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.

கடந்த ஆண்டு வெளியான பட்டியலில் தமிழ்நாடு மூன்றாவது இடத்திலிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஆண்டு மூன்றாவது இடத்திலிருந்து முதலிடத்திற்கு வந்துள்ளதற்குக் காரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிதான் காரணம் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் நேற்று உலக உணவு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, உணவளிப்பதை வெறும் வணிகமாகப் பார்க்காமல் அறம் என உணர்ந்து, தரமான உணவை வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருந்த ட்விட்டரில்,"மனிதரின் அடிப்படைத் தேவைகளுள் தலையாயது உணவு மக்களுக்குப் பாதுகாப்பான உணவு கிடைப்பதை உறுதிசெய்ய அன்றாடம் நடவடிக்கைகள் எடுத்துவருகிறோம்.

உணவளிப்பதை வெறும் வணிகமாகப் பார்க்காமல் அறம் என உணர்ந்து, தரமான உணவை வழங்க வேண்டும் என #WorldFoodSafetyDay-இல் வலியுறுத்துகிறேன்" என தெரிவித்திருந்தார்.

banner

Related Stories

Related Stories