தமிழ்நாடு

“இருப்பைக் காட்டிக்கொள்ள அரைவேக்காட்டுத்தனமாக பேசுகிறார் அண்ணாமலை” : அமைச்சர் செந்தில்பாலாஜி விளாசல்!

“அண்ணாமலை அரைவேக்காட்டுத்தனமாக தொடர்ந்து கூறிவருகிறார் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

“இருப்பைக் காட்டிக்கொள்ள அரைவேக்காட்டுத்தனமாக பேசுகிறார் அண்ணாமலை” : அமைச்சர் செந்தில்பாலாஜி விளாசல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கோவையில் 113.21 கோடி ரூபாய் மதிப்பிலான நகர் நல மைய கட்டிடங்கள் மற்றும் சாலை விரிவாக்கப்பணிகளை தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். இதன் ஒரு பகுதியாக கோவை லாலி ரோடு சாலையில் பணிகளைத் தொடங்கி வைத்த அமைச்சர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், “கோவை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக 1,131 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்ட நிலையில் அவற்றில் 800 கோடி ரூபாய்க்கான பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. இரண்டு மூன்று மாதங்களில் மீதமுள்ள நிலம் கையகப்படுத்தும் பணிகளும் முடிந்து விடும். அதற்கான பணிகளை மாவட்ட ஆட்சியர் விரிவு படுத்தி உள்ளார்.

மற்ற மாவட்டங்களின் மாநகராட்சியை விட அனைத்து திட்டங்களையும் பெற்ற மாவட்டமாக கோவை மாவட்டம் தி.மு.க ஆட்சியில் இருக்கும். தமிழ்நாட்டின் தலைநகராக சென்னை இருப்பினும், தமிழ்நாட்டில் தொழில் துறையின் தலைநகராக கோவை இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, அண்ணாமலை அரைவேக்காட்டுத்தனமாக தொடர்ந்து கூறிவருகிறார். நாங்களும் இருக்கிறோம் என்ற இருப்பைக் காட்டிக் கொள்வதற்காக வாய்க்கு வந்தபடி பேசி வருகிறார் எனவும் அவர் குற்றம் சாட்டினார்.

மேலும், மக்களுக்கு தேவையான திட்டங்களை அரசிடம் கொண்டு வந்து சேர்க்கும் அரசிற்கு எடுத்துக்காட்டான பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகத் துறையினர் மீது அவதூறு பரப்புகிறார் எனவும் கூறினார்.

banner

Related Stories

Related Stories