தமிழ்நாடு

ஆளில்லாத வீட்டில் கொள்ளை முயற்சி : அமெரிக்காவில் இருந்து திருடர்களை அலற விட்ட வழக்கறிஞர் - நடந்தது என்ன?

திண்டுக்கல் மாவட்டத்தில் வீட்டில் நடந்த கொள்ளை முயற்சியை அமெரிக்காவில் இருந்தே விரட்டிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

ஆளில்லாத வீட்டில் கொள்ளை முயற்சி : அமெரிக்காவில் இருந்து திருடர்களை அலற விட்ட வழக்கறிஞர் - நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

திண்டுக்கல் மாவட்டம் எம்.வி.எம் பகுதியைச் சேர்ந்தவர் லீனஸ். வழக்கறிஞரான இவர், அமெரிக்காவில் வசித்துவரும் தனது மகளை பார்ப்பதற்காக மனைவியுடன் சென்றிருக்கிறார். மேலும், அமெரிக்கா செல்வதற்கு முன்பு, லீனஸ் தனது வீட்டில், அதிநவீன புதிய தொழில்நுட்ப கருவி மற்றும் சிசிடிவி கேமரா ஒன்றையும் பொறுத்திவிட்டு சென்றுள்ளார்.

புதிய தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்ட அந்த கருவி மூலம் பெருத்தப்பட்ட சிசிடிவி கேமரா மூலம் வீடியோ காட்சிகளை மொபைல் போனில் பார்க்கும் படியும், சிக்னல் கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் வீட்டிற்கு வந்து செல்பவர்கள் பற்றியும் லீனஸ் தெரிந்துக்கொண்டார்.

இந்நிலையில், இரண்டு மாதமாக வீடு பூட்டப்பட்டிருதை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த திருட்டு கும்பல் ஒன்று வீட்டில் திருட நேற்றைய தினம் முயற்சித்துள்ளனர். இரவு 1 மணியளவில், வீட்டின் நுழைவு வாயில் திருடர்கள் சிலர் நுழைந்துள்ளனர்.

அப்போது, லீனஸ் கைபேசிக்கு சிக்னல் கிடைத்துள்ளது. உடனே லீனஸ் மொபைல் போனில் இருந்தே வீட்டின் இருந்த மின் விளக்குளை எரிய செய்துள்ளார். ஆனாலும் அசராத திருடர்கள் வீட்டின் கதவை உடைக்க முயன்ற போது, அமெரிக்காவில் இருந்தே மொபைல் மூலம் அங்கிருந்த கேமராவில் உள்ள ஸ்பிக்கரில் திருடர்களை எச்சரித்து பேசியுள்ளார்.

ஆனாலும் திருடர்கள் வீட்டிற்கு நுழைந்தனர். இதனிடையே திண்டுக்கல் மேற்கு காவல்நிலையத்திற்கு நடந்தவற்றை லீனஸ் கூறியுள்ளார். இதனையடுத்து, போலிஸார் வருவதை அறிந்த திருடர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். பின்னர் லீனஸ் கொடுத்தப் புகாரின் படி, போலிஸார் சிசிடிவி காட்சிகளை கொண்டு ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் லீனஸின் இத்தகைய முயற்சியையும் பலரும் பாராட்டியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories