தமிழ்நாடு

1 டன் போதைப் பொருட்கள் பறிமுதல்: போலிஸ் நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் - குட்கா கடத்தல் கும்பல் சிக்கியது எப்படி?

சென்னை கொருக்குப்பேட்டையில் குட்கா பதுக்கி வைத்திருந்த 5 பேர் கொண்ட கும்பலை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 டன் போதைப் பொருட்கள் பறிமுதல்: போலிஸ் நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் - குட்கா கடத்தல் கும்பல் சிக்கியது எப்படி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை கொருக்குப்பேட்டை நேரு நகர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், ஆர்.கே.நகர் காவல் ஆய்வாளர் ரவி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலிஸார் மறைந்திருந்து குற்றவாளிகள் 5 பேரை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணையில் ஈடுபட்டனர்.

அப்பொழுது தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களான ஹன்ஸ் பாக்கெட், கூலிப், எம்.டி.எம் பாக்குகள், சைனி பாக்கெட்டுகள், மற்றும் ரெமோ பாக்கெட்டுகள், அடங்கிய 105 போதை பொருள் மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த நீதிமான் என்பவர் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள போதை பாக்குகளை வாங்கி வந்து தண்டையார்பேட்டை எழில் நகர் உள்ளிட்ட வடசென்னை பகுதிகளில் உள்ளவர்களுக்கு விற்பனை செய்ய இருந்தது தெரியவந்தது.

நேரு நகர் பகுதியில், தங்க பாண்டியன் என்பவரிடம் நீதிமான் பொருட்களை கொடுப்பதற்கு வந்த பொழுது போலிஸார் மறைந்து இருப்பதை கண்டு நீதிமான் மட்டும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதனை தொடர்ந்து ஒரு ஆட்டோ மற்றும் தங்கப்பாண்டியனை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணையில் ஈடுபட்ட பொழுது, சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களின் வீட்டில் பதுக்கி வைத்திருந்து வடசென்னை பகுதிகளில் சில்லரை விற்பனை செய்வதற்காக வைத்திருந்த போதைப்பொருள் மூட்டைகளையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் நீதிமானின் குடோனிலும் பதுக்கி வைத்திருந்த 1 டன் போதைப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர். இதனைத்தொடர்ந்து தங்கப்பாண்டியன், ராமர் களஞ்சியம், சபாபதி, மணிகண்டன், தங்கபாண்டி, உள்ளிட்ட 5 பேரை கைது சசெய்தனர். மேலும் நீதிமானை மட்டும் போலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories