தமிழ்நாடு

திருவிழா கொண்டாட்டத்தை ஒத்திவைத்து ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட இளைஞர்கள் பட்டாளம்.. மணப்பாறையில் நெகிழ்ச்சி!

திருவிழா கொண்டாட்டத்தை ஒத்திவைத்து ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட இளைஞர்கள் பட்டாளம்.. மணப்பாறையில் நெகிழ்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள வேப்பிலை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா நடைபெற்று வரும் நிலையில் வேடபரி திருவிழா இன்று இரவு நடைபெற்றது.

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆலயம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் திரண்டிருந்தனர். வீதியுலாவிற்காக வெளியே புறப்பாடாகும் நேரத்தில் திடீரென சைரன் ஒலியுடன் ஆம்புலன்ஸ் ஒன்று திருச்சி சாலை ரயில்வே மேம்பாலம் வழியாக அவசரமாக வந்து கொண்டிருந்தது.

திருவிழா கொண்டாட்டத்தை ஒத்திவைத்து ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட இளைஞர்கள் பட்டாளம்.. மணப்பாறையில் நெகிழ்ச்சி!

அப்போது திருவிழா கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ் வர சிரமப்பட்ட நிலையில் வேகமாகவும், விவேகமாகவும் செயல்பட்டு படுகள் சுமந்து வாகனம் தூக்க வந்த இளைஞர்கள் சப்பரம் தூக்குவதை ஒத்திவைத்துவிட்டு கையில் இருந்த கொடிக்கம்பங்களுடன் வேகமாக மேம்பாலம் நோக்கி ஓடி ஆம்புலனஸ் செல்வதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்து அனுப்பி வைத்தனர்.

அதன் பின்னர் கோவிலுக்குள் வந்து வாகனத்தை சுமந்து வீதி உலாவிற்கு இளைஞர்கள் புறப்பட்டனர். விரைந்து செயல்பட்டு வழி ஏற்படுத்திக் கொடுத்த இளைஞர்களை பலரும் வெகுவாக பாராட்டினர்.

திருவிழா கொண்டாட்டத்தை ஒத்திவைத்து ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட இளைஞர்கள் பட்டாளம்.. மணப்பாறையில் நெகிழ்ச்சி!

நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) பால்குட விழாவிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் ஆம்புலசிஸ்கு வழிகொடுத்து அனுப்பியது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தி நிலையில் நேற்றும் (திங்கள்) அதேபோல் ஆம்புலன்சிற்கு வழி கொடுத்து அனுப்பிய மனிதநேயம் செயல் பாராட்டைப் பெற்றுள்ளது.

banner

Related Stories

Related Stories