தமிழ்நாடு

“லிப்ட் அறுந்து விழுந்து பள்ளி மாணவன் பரிதாப பலி” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகள் தலைமறைவு!

கும்மிடிப்பூண்டியில் திருமண மண்டபத்தில் லிஃப்ட் அறுந்து விழுந்து, 11-ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த வழக்கில் திருமண மண்டப உரிமையாளரான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகள் தலைமறைவாகியுள்ளார்.

“லிப்ட் அறுந்து விழுந்து பள்ளி மாணவன் பரிதாப பலி” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகள் தலைமறைவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் பகுதியில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகள் ஜெயப்பிரியாவிற்கு சொந்தமான திருமண மண்டபத்தில் நேற்றிரவு ஆந்திராவை சேர்ந்த மணமகனுக்கும், கும்மிடிப்பூண்டி சேர்ந்த மணமகளுக்கும் திருமண வரவேற்பு நடைபெற்றது.

அப்போது முதல்தளத்தில் உணவு பரிமாறுவதற்கு கீழ் தளத்திலிருந்து உணவு எடுத்து சென்றபோது லிஃப்ட் அறுந்து விழுந்ததில் கேட்டரிங் பணிகளுக்காக உணவு பரிமாற வந்த காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தை சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவன் சீத்தல் தலை நசுங்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

அவருடன் லிப்ட்டில் சென்ற விக்னேஷ், ஜெயராமன் ஆகிய 2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த சீத்தலின் சடலம் உடற்கூறு ஆய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக திருமண மண்டபத்தின் உரிமையாளர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மகள் ஜெயப்பிரியா, மேலாளர் திருநாவுக்கரசு, மேற்பார்வையாளர் வெங்கடேசன் மற்றும் லிப்ட் ஆபரேட்டர் கக்கன் ஆகிய 4 மீது சிப்காட் காவல்துறையினர் ஐபிசி 304(ii) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

“லிப்ட் அறுந்து விழுந்து பள்ளி மாணவன் பரிதாப பலி” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகள் தலைமறைவு!

இந்த சம்பவத்தில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள திருமண மண்டப உரிமையாளர் ஜெயப்பிரியா தலைமறைவான நிலையில் ஊழியர்கள் மூவரை போலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட திருமண மண்டபத்தின் மேலாளர் திருநாவுக்கரசு, மேற்பார்வையாளர் வெங்கடேசன் மற்றும் லிப்ட் ஆபரேட்டர் கக்கன் ஆகிய 3 பேரை சிப்காட் காவல் காவல் துறையினர் பொன்னேரி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

வழக்கை விசாரித்த மேஜிஸ்திரேட் மோகனப்ரியா மூவரையும் வரும் 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து திருமண மண்டப ஊழியர்கள் மூவரையும் சிப்காட் காவல்துறையினர் பொன்னேரி கிளைச்சிறையில் அடைத்தனர். இந்த விபத்தில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள திருமண மண்டபத்தின் உரிமையாளரான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகள் ஜெயப்ரியா தலைமறைவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories