தமிழ்நாடு

மெரினாவின் அழகுக்கே அழகு சேர்க்கும் திமுக அரசு.. செயல்பாட்டில் முதல்வரின் கனவு திட்டமான Project Blue !

மழைநீர் வடிகால் வழியே கழிவு நீரை வெளியேற்றுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சியின் துணை மேயர் மகேஷ்குமார் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மெரினாவின் அழகுக்கே அழகு சேர்க்கும் திமுக அரசு.. செயல்பாட்டில் முதல்வரின் கனவு திட்டமான Project Blue !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை மெரினா கடற்கரையை அழகுபடுத்த 'Project Blue' என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் கடற்கரையில் உள்ள கழிவறை, நடைமேடை, பூங்காக்களை சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார் பார்வையிட்டார்.

மேலும் மெரினா கடற்கரையின் அழகை மாற்றுத்திறனாளிகள் கடலருகே சென்று ரசிக்கும் விதமாக கடற்கரை மணல்வெளியில் அமைக்கப்படவுள்ள நிரந்தரப் பாதை குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணை மேயர் மகேஷ்குமார், "வெளிநாட்டு கடற்கரைகளைப் போல மெரினா கடற்கரையையும் அழகுபடுத்த , முதல்வரின் கனவுத் திட்டமான 'Project Blue' திட்டம் அமல்படுத்தப்படுகிறது. அதன்படி மெரினாவில் உள்ள கழிவறை , குடிநீர் இணைப்புகள் , பூங்கா , மாற்றுத்திறனாளிகளுக்கு அமைக்கப்படவுள்ள நிரந்தரப் பாதை குறித்து இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தோம்.

மெரினாவின் அழகுக்கே அழகு சேர்க்கும் திமுக அரசு.. செயல்பாட்டில் முதல்வரின் கனவு திட்டமான Project Blue !

மெரினா நீச்சல் குளத்தை மேம்படுத்தும் பணியில் மாநகராட்சி ஈடுபட உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு மெரினா கடற்கரையில் நிரந்தரமாக மரப்பாதை அமைக்க 1 கோடி ரூபாய்க்கு மேல் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால்களில் கழிவு நீரை வெளியேற்றும் விதமாக அமைக்கப்பட்டுள்ள இணைப்புகளை கண்டறிந்து அவற்றை துண்டிப்போம்.

இதுபோன்று செய்யும் தனி நபர்களுக்கும், நிறுவனங்களுக்கும் ஓரிரு முறை எச்சரிப்போம் , பின்னர் மாநகராட்சி மூலம் அபராதம் விதிக்கப்படும். சென்னையில் மாடுகளை வளர்ப்போர் குறிப்பிட்ட எல்லைக்குள்ளே அவற்றை பராமரிப்பதற்கு ஏற்ற வகையில் மாநகராட்சி மூலம் இட வசதி ஏற்படுத்தித் தரப்படும்" இவ்வாறு அவர் கூறினார்.

banner

Related Stories

Related Stories